Actress meena

1990 ல் தெலுங்கில் ‘ நவயுகம்’படத்தின் மூலம் 15 வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு பிறகு மீனாவுக்கு தமிழில் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அப்போது முன்னணி நடிகர்களாக திகழ்ந்த அஜித்,விஜயகாந்த், ரஜினி, கமல் ஹாசன், பிரபு, சரத்குமார், சத்யராஜ், முரளி, கார்த்திக், போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்துள்ளார். புதிய கதாநாயகிகளின் வருகையால் பட வாய்ப்புகள் குறை தொடங்கின.

Actress meena

அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்போது அவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும் , தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.அவரது கணவர் சில ஆண்டுகளாக நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த வித்தியாசாகர் அவர்கள் 2022 ஆம் ஆண்டு காலமானார்.

Actress meena

கணவரை இழந்த துக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் மீனா, சமீபகாலமாக நடிப்பிலும் கவனம் செலுத்து வருகிறார்.தற்போது தமிழில் ‘ரவுடி பேபி’ படத்திலும் , மலையாளத்தில் அனந்தபுரம் டைரி’ படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மீனாவிடம் இரண்டாம் திருமணம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.இது குறித்து மீனா கூறியதாவது, ஒரு ஹீரோ தனிமையில் இருந்தால், அவரை பற்றி அவதூறான வதந்திகள் பரவுவதில்லை.அதுவும் ஒரு ஹீரோயின் கணவனை இழந்து தனிமையில் இருந்தால் தான்.

Actress meena

இப்படி அதிகமான கேள்விகள் வருகின்றன.கணவனை இழந்து தனிமையில் இருப்பவர்கள் ஏராளம். தனியாக வாழ முடியும்.”அந்த மாதிரியான வதந்திகள் என்னையும் என்னுடைய குடும்பத்தையும் பாதித்தது. தற்போது வரை மறுமணம் குறித்து யோசிக்கவில்லை. எனக்கு மகள் இருக்கும் சூழலில் மறுமணம் என்பது அவரையும் சார்ந்தது தான்” என்று மீனா கூறியுள்ளார். 

Actress meena

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here