பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் மற்றும் கயல் ஆனந்தி நடித்து 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். சமூக விழிப்புணர்வை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சில தரப்பினரால் எதிர்க்கப்பட்டாலும் பல ரசிகர்கள் இத்திரைப்படத்தினை பெரிதளவில் பாராட்டினார்.
பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்ற இத்திரைப்படத்தில் பல புது முகங்கள் அறிமுக படுத்தப்பட்டிருந்தனர். அந்தவகையில் ஹீரோவாக நடித்த கதிரின் தந்தையாக கிராமியக் கலைஞர் தங்கராஜூவை திரைப்படக் குழுவினர் அறிமுகப்படுத்தினார். தெருக்கூத்துகளில் பெண் வேடம் அனைத்து மக்களை மகிழ்ச்சி படுத்தும் தங்கராஜு இத்திரைப்படத்தில் பெண் சாயல்களை கொண்டு நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கல்லூரியில் அவரது பெண் பாவனங்களை வைத்து உயர்ந்தவர்கள் தங்கராஜின் வேட்டியை கழட்டி ஓட விடுவது போல் அமைந்திருந்த காட்சி ரசிகர்கள் பலரின் கண்களிலும் கண்ணீரை வர வைத்தது. அந்த காட்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் பதிந்த தங்கராஜின் தற்போதைய நிலை தெரியுமா?
சென்னையில் வாழ்ந்து வரும் தங்கராஜ் வெள்ளரி வியாபாரம் செய்து வருவதாகவும் கடந்த ஒரு வருடமாக வியாபாரம் இல்லை என்றும் தன் குடும்பத்தை காக்க உதவிய மாரி செல்வராஜுக்கு மிகவும் நன்றி கடன் பட்டிருக்கேன் எனவும் தங்கராஜு தெரிவித்துள்ளார். மேலும் ஒரு மகளை பெற்றெடுத்த தங்கராஜுவின் வீடு வாழ்வாதாரம் மற்றும் சில தகவல்கள் கீழ்கண்ட காணொளியில்!