வனிதா விஜயகுமார்

பிரபல தமிழ் பட நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் தற்பொழுது சீரியல் ஒன்றில் கெஸ்ட் ரோல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 1995-ம் ஆண்டு நம்பிராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த சந்திரலேகா திரைப்படம் மூலம் திரையில் அறிமுகமான வனிதாவுக்கு நினைத்த படி வரவேற்பு ரசிகர்களின் மத்தியில் கிடைக்கவில்லை.

இருப்பினும், சில தெலுங்கு மற்றும் கன்னடா படங்களில் நடித்துள்ள வனிதா இயக்குனராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றி உள்ளார். அதனைத் தொடர்ந்து தன் தந்தையுடன் வனிதாவிற்கு மனக்கசப்புகள் ஏற்பட்டு மீடியாவில் செய்திகள் வெளியாகின. அதன்பின் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் அவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

Vanitha Vijayakumar

தன் தைரியமான பேச்சால் ரசிகர்களின் மத்தியில் பிரபலனமான வனிதா தற்பொழுது சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக உள்ளார். சந்திரலேகா திரைப்படத்தை இயக்கிய இயக்குனருடன் மீண்டும் ஹீரோயினாக நடித்து வரும் வனிதா சின்னத்திரை சீரியல் ஒன்றில் கெஸ்ட் ரோல் செய்துள்ள செய்தி அவரது ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாகியுள்ளது.

ஏற்கனவே வனிதா சன் டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா சீரியலில் முக்கிய கதாபாத்திரம் நடித்திருந்த நிலையில் தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் திருமதி ஹீட்லர் என்ற நாடகத்தில் அம்பிகா மற்றும் அமித் உள்ளிட்டோருடன் நடித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ஷூட்டிங் பொழுது எடுத்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றது. வனிதா ஒரு ஹிட்லர் என பலரும் நினைத்திருக்கும் வேளையில் அந்த நாடகத்தின் பெயர் இவருக்கு கரெக்டாக பொருந்துகிறது என பலரும் கேலி செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here