பெப்சி உமாவை பற்றி தெரியாத ஆளே இல்லை தமிழ்நாட்டில் ஒரு தொகுப்பாளினியாக 15 ஆண்டுகள் பயணித்து தங்களுக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளவர்தான் பெப்சி உமா அவர்கள். இவர் சில மாதங்களுக்கு முன்பு விருது வழங்கும் விழாவில் தனது வாழ்க்கை வரலாறு மற்றும் நிகழ்ச்சியில் நடந்த சில சம்பவங்களையும் பகிர்ந்துள்ளார் அவற்றில் தன்னிடம் தன்னுடைய திரைப்படத்தில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் பேசிய போது நடந்து நெகிழ்ச்சியான சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார்.
அதில் ரஜினிகாந்த் என்னிடம் பேசியது எனக்கு ராகிங் பண்ணியது போல இருந்தது என்று பெப்சி உமா பேசி இருக்கும் நிலையில் அந்த வீடியோவை இப்போது இணையத்தில் பகிர்ந்து ரஜினிகாந்துக்கு எதிராக அதை ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.
அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு நடிகை ரம்பா நடிகர் ரஜினிகாந்த் உடன் அருணாச்சலம் திரைப்படத்தில் நடிக்கும் போது அவர் தன்னிடம் கோபப்பட்டது குறித்தும் தன்னிடம் விளையாடியது குறித்தும் விளையாட்டுப் போக்கில் பேசியிருந்தார். ஆனால் அதை சில நெட்டிசன்கள் ரம்பாவிடம் அத்து மீறிய ரஜினி என்ற தலைப்பில் ஹேஷ்டேக் போட்டு இணையத்தில் ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தொகுப்பாளினி பெப்சி உமா சில மாதங்களுக்கு முன்பு விருது வாங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் பற்றி ஒரு சில வார்த்தைகளை பேசி இருக்கிறார்.
அதை இப்போது பகிர்ந்து சில நெட்டிசன்கள் ரஜினிகாந்தை கலாய்த்து வருகின்றனர். பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு தொகுப்பாளினிக்கு இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்றால் அது கண்டிப்பாக பெப்சி உமாவுக்கு தான்.
ஆனால் எவ்வளவு அவருக்கு ரசிகர்கள் இருந்தாலும் அவர் தான் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று உறுதியாக இருந்திருக்கிறார். அவருக்கு ரஜினிகாந்தோடு மட்டுமல்லாமல் கமல்ஹாசன், ஷாருக்கான் என பல முன்னணி நடிகர்களோடு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அதை எல்லாம் வேண்டாம் என்று பெப்சி உமா மறந்துவிட்டாராம். கமல்ஹாசனின் அன்பே சிவம் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்திருக்கிறார்.
15 வருடங்களாக ஒரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெருமையும் பெப்சி உமாவிற்கு தான் சேரும். அவரிடம் ஒரு முறையாவது பேசிவிட வேண்டும் என்று விரும்பிய ரசிகர்கள் ஏராளம். 90 கிட்ஸ்க்கு பிடித்த மிகவும் பிரபலமான தொகுப்பாளினி ஆவார் இவர். இவரைப் பற்றி தெரியாத இளைஞர்களே அன்று இல்லை. அப்படி இருக்கும் போது அவருக்கு அதிகமான சினிமா வாய்ப்புகள் வந்திருக்கிறது. இப்படி ஒரு நேரத்தில் தான் ரஜினியின் ஒரு படத்திற்கு பெப்சி உமாவை தேர்வு செய்து இருக்கிறார்கள்.
ஆனால் அதற்கு நான் நடிக்க மாட்டேன் என்று பெப்சி உமா சொல்லி இருக்கிறார். அதற்கு ரஜினியே போன் செய்து நடிக்க விருப்பமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அப்போது பெப்சி உமா வேண்டாம் நான் தொகுப்பாளினியாகவே இருந்து விடுகிறேன் அதில் கிடைக்கும் பிரபலமே போதும் நடிகையான பிரபலம் கிடைக்கும் ஆனால் அந்த கஷ்டத்தை என்னால் அனுபவிக்க முடியாது என்று கூறி இருக்கிறார்.
அப்போது பெப்சிமாவிடம் ரஜினிகாந்த் எனக்கு உங்க பக்கத்துல எந்த பிரபலம் இருந்தாலுமே கண்னு போகாம உங்க பக்கமே போகிறது என்று சொன்னாராம். அது ராக்கிங் மாதிரி இருந்தாலும் இப்போ சொல்லாமல் எப்ப சொல்றது என்று பெப்சி உமா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.