இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி திரைப்படங்களை எடுத்தார். அதன்பிறகு நடிகர் விஜயுடன் மாஸ்டர், கமல்ஹாசனுடன் விக்ரம்,மீண்டும் விஜயுடன் லியோ உள்ளிட்ட படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார்.Director lokesh kanagaraj
இந்நிலையில் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பரபரப்பான மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதாவது மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்நத ராஜா முருகன் என்பவர் மதுரை உயர்நீதின்ற கிளையில். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது மனு ஒன்றை தொடுத்துள்ளார்.Director lokesh kanagaraj
அந்த மனுவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கும் திரைப்படங்களில் சட்டவிரோத செயல்கள்,வாகனங்களில் அதிவேகமாக செல்வது,கலவரம்,போதைப்பொருள் பயன்பாடு,காவல் துறை உதவியுடன் எந்த வகையான குற்றங்களையும் செய்யலாம் என்பது போன்ற காட்சிகள் மூலம் சமூகத்துக்கு தவறான வழிக்காட்டுதல்களை வழங்கி வருகிறார்.
இத்திரைப்படங்களில் வரும் காட்சிகள் இளைஞர்களுக்கும் மக்களுக்கும் பெரும் தவறான வழிகாட்டுதலை ஏற்படுத்தும் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.Director lokesh kanagaraj
இதுபோன்ற திரைப்படங்களை காட்சிகளை தணிக்கை குழு முறையாக பரிசோதிக்க வேண்டும்.அந்த மனுவில், லியோ படத்தில் உள்ள பெரும்பாலான காட்சிகள் வன்முறையை ஆதரிப்பதோடு உள்ளதுடன், பெரும்பாலும் ஆயுத கலாச்சாரமும், மதம் தொடர்பான சின்னங்களை பயன்படுத்தி முரண்பாடான கருத்துகளையும், போதை பொருள் பயன்பாடு, பெண்கள் குழந்தைகளை கொல்ல வேண்டும் என்ற கருத்தை விதித்தல் உள்ளிட்ட காட்சிகளை லோகேஷ் கனகராஜ் காட்சிப்படுத்தி உள்ளார்.
இதுமட்டுமின்றி கலவரம், சட்டவிரோத செயல்கள்,போதை பொருள் வியாபாரம், துப்பாக்கிகளை பயன்படுத்துதல், காவல்துறை உதவி உடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் என்ற சமூகவிரோத கருத்துகளை லியோ படத்தில் காட்சிப்படுத்தி உள்ளார்.Director lokesh kanagaraj
லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்யப்பட வேண்டும். மேலும் இந்திய குற்றவியல் தண்டனை சட்டப்படி வழக்குப்பதிவு செய்து லியோ படத்தை முழுமையாக தடை விதிக்க வேண்டும் என கோரி இருந்தார்.இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. லோகேஷ் கனகராஜ் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இதனால் வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here