ஒரே நேரத்தில் கமல், ரஜினி, அஜித், விஜய் என 4 முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா, அடுத்ததாக இன்னொரு பிரபல நடிகரின் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
த்ரிஷா தனது முதல் கதாநாயகியாக மௌனம் பேசியதே (2002) திரைப்படத்தில் நடித்தார் . தமிழ் சினிமாவில் வணிக ரீதியாக வெற்றி பெற்ற சாமி (2003), கில்லி (2004) மற்றும் ஆறு (2005) ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார தெலுங்கு சினிமாவில்,சிறந்த நடிகைக்கான மூன்று பிலிம்பேர் விருதுகளை வென்றது.
கட்டா மீத்தா (2010) படத்தில் நடித்ததன் மூலம் த்ரிஷா இந்தி சினிமாவில் அறிமுகமானார் . [10] அபியும் நானும் (2008), காதல் நாடகம் விண்ணைத்தாண்டி வருவாயா (2010), அரசியல் திரில்லர் கொடி (2016), காதல் நாடகம் ’96 (2018), மற்றும் வரலாற்று நாடகங்களான பொன்னியின் செல்வன்: நான் (2008) ஆகியவற்றில் அவரது நடிப்பு. 2022) மற்றும் பொன்னியின் செல்வன்:II (2023) விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றன. கொடி மற்றும் ’96 இல் அவரது நடிப்பு ஃபிலிம்பேர் விருதுகள் தென்னகத்தில் விமர்சகர்கள் விருதையும் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுத் தந்தது.லியோ (2023) என்ற அதிரடித் திரைப்படத்துடன் அவரது அதிக வசூல் வெளியீடு வந்தது.
கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ’தக்லைஃப்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ ஆகிய படங்களில் த்ரிஷா நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் தளபதி விஜய்யுடன் த்ரிஷா நடித்த ’லியோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து கம்பேக் கொடுத்தார் த்ரிஷா. அதன்பின்,அஜித்தின் விடாமுயற்சி, கமலுடன் தக் லைஃப் என நயன்தாரா விட்ட இடத்தை விரட்டிப் பிடித்துள்ளார் த்ரிஷா. முக்கியமாக சமீப காலங்களில் த்ரிஷா நடிக்கும் படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. அதன்படி,அவர் ஒரு படத்துக்கு சுமார் 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம்.
இந்த நிலையில் அடுத்ததாக சல்மான்கான் நடிக்க இருக்கும் திரைப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை முடிவடைந்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில், சல்மான் கான் நடிப்பில் கரன் ஜோகர் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் த்ரிஷா இணைந்துள்ளதால் மீண்டும் அவர் பாலிவுட்டில் கால் பதிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே ஒரு சில பாலிவுட் படங்களில் த்ரிஷா நடித்துள்ள நிலையில் மீண்டும் இந்தி திரையுலகில் ஒரு சுற்று வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.