நடிகர் சித்தார்த்தும் அதிதி ராவும் காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் இருந்து செய்திகள் வந்தாலும், இருவரும் இதுகுறித்து வெளிப்படையாக எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. சித்தார்த் அவர்கள் 2003 ஆம் ஆண்டு எஸ்.சங்கர் டைரக்ஷனில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் ஒரு தனி வரவேற்பை பெற்று முத்திரை பதித்தார்.
நடிப்பு மட்டுமில்லாமல், அவ்வப்போது இணையத்தில் கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். எந்த கருத்து என்றாலும் அதை துணிச்சலுடன் பதிவிடும் சித்தார்த் தனது காதல் குறித்து மட்டும் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருக்கிறார். சித்தார்த் மற்றும் அதிதி பாலனும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. 2021 இல் வெளியான மஹாசமுத்திரம் படத்தில்.
இருவரும் இணைந்து நடித்த போதே பல இடங்களில் ஜோடியாக சுற்றி வந்தனர். அதுமட்டுமில்லாமல் படத்தின் ப்ரோமோஷனுக்கு ஒரே காரில் ஜோடியாக சென்றனர். சினிமா விழாக்கள், திருமண வீடு,பார்ட்டி என அனைத்திற்கும் இருவரும் ஜோடியாகவே வந்ததால் இருவரும் காதலிப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிதி ராவுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து இந்த மகிழ்ச்சிக்கு காதல் மட்டும் காரணம் என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவினைப்பார்த்த ரசிகர்கள் லவ் பண்றீங்களா?இல்லையா? என கேட்டு வருகின்றனர். நடிகர் சித்தார்த் நடித்து அண்மையில் வெளியான சித்தா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல் குறித்த இத்திரைப்படம் அப்பட்டமாக படமாக்கப்பட்டது. பான் இந்திய திரைப்படமாக வெளியான இத்திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. இப்படம் மொத்தமாகவே 6 கோடி செலவில்தான் உருவானதாக கூறப்படுகிறாது. ஆனால், படம் 20 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை அதிதி ராவ்: இந்திய அரச வம்சத்தை சேர்ந்த அதிதி ராவின் கொள்ளுத்தாத்தா அசாம் மாநில ஆளுநர் ஆவார். இவரது தாயார் வித்யா ராவ் கர்நாடக இசைப்பாடகியும் எழுத்தாளரும் ஆவார். 1986ம் ஆண்டு பிறந்த அதிதி 2009 ம் ஆண்டு நடிகர் சத்யதீப் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
நடிகை அதிதி ராவின் முன்னாள் கணவர் சத்யதீப் மிஸ்ரா பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பல படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில் வெளியான விக்ரம் வேதா இந்தி ரீமேக்கிலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கும் பாலிவுட் நடிகை நீனா குப்தாவை கடந்த ஆண்டு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதித்தி ராவின் இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தில் அவரும் இருவரும் நெருக்கமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இதனால் குழப்பம் அடைந்த நிட்டிசங்கள் தங்களது குழப்பம் அடைந்த பதில்களை தெரிவித்து வருகின்றனர் இது உண்மையா பொய்யா என்று தகவல் வரும் வரை காத்திருக்கின்றனர்.