Rakshan Wife

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி சமையல்களைத் தாண்டி காமெடியில் கலக்கி வருகின்றது. குக் வித் கோமாளி சீசன் 1 வெற்றியைத் தொடர்ந்து சீசன் 2 விலும் செப் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு அவர்களை நடுவர்களாக கொண்ட இந்த நிகழ்ச்சியை ரக்சன் தொகுத்து வழங்கி வருகிறார்.

ரேடியோ ஜாக்கி நடிகர் மற்றும் தொகுப்பாளரான ரக்சன் 2014- ம் ஆண்டு சின்னத்திரையில் அறிமுகமாகி கலைஞர் மற்றும் ராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றினார். அதன் பின் 2015-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சிக்கு தொகுப்பாளரான ரக்சன் தொடர்ந்து மூன்று சீன்களை வெற்றிகரமாக தொகுத்து வழங்கினார்.

அதன்பின் ஜோடி பன் அன்லிமிடெட் என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற ரக்சன் செமி பைனலில் வெளியேற்றப்பட்டார். அதன் பின் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ரக்சன் வெள்ளித்திரையிலும் நல்ல வரவேற்பை பெற்றார்.

Rakshan

அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரக்சனும் புகழும் பெண்களிடம் அடிக்காத லூட்டிகளே இல்லை. ஏற்கனவே ரக்சன் மற்றும் ஐகியூலின் இருவரும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவிய நிலையில் ரக்சன் அதைப்பற்றி ஏதுவும் பேசவில்லை. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் ரக்சனுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று நினைத்திருந்த வேலையில்,

குக் வித் கோமாளி நேற்றைய எபிசோடில் தனக்கு திருமணம் ஆன செய்தியை அனைவரிடமும் கூறினார் மேலும் அவரது திருமணம் காதல் திருமணம் எனவும் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சரண்யா என்பது ரக்சனின் மனைவி பெயர். மேலும் அவர்களுது புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அந்த புகைப்படம் உங்கள் பார்வைக்காக!

Rakshan Wife Rakshan Family

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here