பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் பலரின் வாழ்க்கையும் மாற்றியுள்ளது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3 யில் பங்கேற்ற மாடலான மீரா மீதும் பல சர்ச்சைகளில் சிக்கினார். மேலும் சில வாரங்களே பிக் பாஸ் வீட்டினில் தாக்கு பிடித்த மீரா மிதுன் சில வாரங்களில் மக்களால் வெளியேற்றப்பட்டார்.

அதன் பின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்த மீரா மிதுன் சூர்யா விஜய் போன்ற தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை பற்றி தவறாக பேசி அவரது ரசிகர்களின் பிடியில் சிக்கி கண்டபடி திட்டு வாங்க ஆரம்பித்தார். இது போன்ற பல பிரச்சனைகளைப் பற்றி பேச ஆரம்பித்த மீரா மிதுன் யூடூப் சேனல் ஒன்று ஆரம்பித்து அதில் தன் ஆதங்கங்களை பதிவிட்டு வந்தார்.

Bigg Boss Meera

அதனைத் தொடர்ந்து தன் காதலனை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்த மீரா மிதுன் வழக்கம் போல் சில ரசிகர்கள் மத்தியில் தவறாக பேசப்பட்டார். அதையெல்லாம் தொடர்ந்து படித்து வந்த மீரா மிதுன் மன உலைச்சலிற்கு ஆளாகி சில நாட்களாக சமூக வலைத்தளத்திற்கு வராமல் இருந்தார். 15 நாட்களுக்கும் மேல் வராத மீரா மிதுன் தற்பொழுது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் தான் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாகவும் நான் நல்ல குடும்பத்தை சேர்ந்தவள் என்னை இப்படி பேசாதீர்கள் எனவும் என்னை எனக்கே பிடிக்கவில்லை தற்கொலை செய்து கொள்வது போல் இருக்கின்றது எனவும் கதறி அழுந்து பதிவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ உங்கள் பார்வைக்காக!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here