தன் குரலினால் ரசிகர்களின் நெஞ்சத்தை வென்ற பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் கடைசி மூச்சு கடந்த செப்டம்பர் மாதம் 25-ம் தேதி மதியம் 1.04-யில் நின்றது இதனால் சம்பித்து போன ரசிகர்களால் உலகமே அந்த நிமிடத்தில் நின்றது. 16 மொழிகளில் 40,000-ற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய மாமனிதனின், எளிதில் பார்த்திடாத சில புகைப்படங்கள்உங்கள் பார்வைக்காக!
கொரோனாவால் ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே எம் ஜி எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திரு எஸ் பி பி அவர்கள் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின் செப்டம்பர் முதல் வாரத்தில் அவரது உடலில் நல்ல முன்னேற்றம் உள்ளது என எஸ் பி பி மகனான எஸ் பி சரண் அவர்கள் தன சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
அவருக்கு இனி எந்த வித பாதிப்பும் இருக்காது என அனைவரும் பெரும் மூச்சு விட்ட நிலையில் செப்டம்பர் 24-ம் தேதி இரவு அவர் சீரியஸாக இருப்பதாக செய்திகள் வெளியாகின அதன்பின் இது உண்மையா அல்ல வதந்தியா என்று ஆராய்வதுக்குள் அவர் மறைந்த செய்தி வெளியாகியது. பலரின் பிராத்தனைகளும் வீணாய் போன நிலையில் ரசிகர்களும் திரையுலகினர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பாலிவுட் சல்மான் வரை இந்தியில் உள்ள அனைத்து மக்களும் எஸ் பி பி அவர்களின் மறைவை குறித்த வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். நமது பாட்டனார்கள் இளம் வயதில் இருந்த நம் இளம் வயது வரை கேட்டு கொண்டிருக்கும் ஏராளமான பாடல்கள் திரு எஸ் பி பி அவர்கள் பாடியதே. இன்னும் 1000 ஆண்டுகள் கடந்தாலும் மக்களின் காதில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும் என்பது உறுதி. அவரை நினைவு படுத்தும் வகையில் அவரின் சில மறக்க முடியாத புகைப்படங்கள்