Shalini sister

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி பிரபலங்களுடன் நடித்து கலக்கி கொண்டிருந்தவர் நடிகை ஷாலினி அவர்கள். திருமணத்திற்கு பின்னர் சினிமாக்களில் தோன்றுவதை குறைத்த நடிகை ஷாலினி அவர்களுக்கு கூட பிறந்தவர் ஒரு தங்கை இருப்பது உங்களுக்கு தெரியுமா? அதும் செதுக்கி வச்ச சிலைபோல் இருப்பது தெரியுமா? அவரைப்பற்றி விவவரமும் புகைப்படமும் கீழ் பத்தியில்!

கேரளாவில் பிறந்த ஷாலினி அவர்கள் தன் தந்தைக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை என்பதால் சென்னைக்கு குடியேறினர். தன் தந்தையால் அடைய முடியாத இலட்சியத்தை அவரது பிள்ளைகள் நிறைவேற்றி வைத்தனர் என்றே கூற வேண்டும். குழந்தை பருவம் முதலே சினிமாவில் ஈடுப்பட்ட ஷாலினி அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே போன்ற வெற்றி படங்களில் கதாநாயகியாக தோன்றியுள்ளார். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட அஜித் அவர்களை திருமணம் செய்த பின்னர் சினிமாக்களில் தோன்றுவதை நிறுத்திவிட்டார். ஷாலினிக்கு ரிச்சர்ட் ரிஷி என்றே அண்ணனும் ஷாமிலி என்றே தங்கையும் உள்ளனர். இருவரும் நடிகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அக்கா ஷாலினி போலவே சிறு வயதில் இருந்து சினிமாக்களில் தோன்ற ஆரம்பித்த ஷாமிலி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடா என்று அணைத்து மொழிகளிலும் குழந்தை கதாபாத்திரமாக கலக்கினார். இதனை மொழிகளில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த ஷாமிலி கதாநாயகியாக நடித்த திரைப்படங்கள் மிகவும் கம்மி தான். கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த வீர சிவாஜி திரைப்படம் உட்பட அவர் நடித்த ஒட்டு மொத்த திரைப்படமே நான்கு தான்.

அதனால் பெரும் அளவில் பாப்புலர் ஆகாத ஷாமிலி நமக்கும் அவர் ஷாலினி தங்கச்சி அல்லது தல அஜித் அவர்களின் மச்சினிச்சி என்பது தெரியாமலே பொய் விட்டது. இவர் தமிழில் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “அஞ்சலி” திரைப்படத்தில் மனநலம் குன்றிய குழந்தை கதாபாத்திரமாக தோன்றியது யாராலும் மறக்கவே முடியாது.

இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 10-ம் தேதி திரைப்பட தயாரிப்பாளரான அருண் பவார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஷாமிலியின் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here