பிக் பாஸ் தமிழ் சீசன் 4 ஆரம்பத்தில் தேவதையாக தெரிந்த சம்யுக்த தற்பொழுது ராட்சசியாக மாறி வருகிறார் என ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். காரணம், நேற்று பிக் பாஸ் வீட்டினில் ஆரி மற்றும் சம்யுக்தவின் இடையில் நடந்த விவாதம் தான். இதற்கு ரசிகர்கள் பலரும் சம்யுக்தவிற்கு எதிராக குறுப்படம் வெளியிட்டு வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டினில் குரூப்பிஷம் என்பது சீசன் 3 முதலே ஆரம்பித்த நிலையில் அது சீசன் 4-யிலும் தொடர்ந்து நடந்து வருகின்றது. ஆனால் இம்முறை போட்டியாளர்கள் இரண்டு குரூப்பாக பிரிந்துள்ளனர். இந்த இரண்டு குரூப்பும் தங்களுக்கு பிடித்தவர்களை தக்கவைத்து கொண்டு நடுநிலையில் உள்ள போட்டியாளர்களை வெளியில் அனுப்பும் தந்திரத்தை அறிந்த ஆரி. கடந்த இரண்டு வாரங்களாக தனக்கு நடக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
முதலில் அர்ச்சனா மற்றும் பாலுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட ஆரி அவர்கள் நேற்று சம்யுக்தா உடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நேற்று கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் பிக் பாஸ் வீட்டினில் உள்ள போட்டியாளர்களின் மீது யாருக்கேனும் குறை இருந்தால் வழக்கு தொடரலாம் அதற்கு சுசி அவர்கள் நீதிபதியாக இருந்த இருப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு சம்யுக்த ஆரி அவர்கள் “தன் கேப்டன் பதவியில் உள்ள குற்றச்சாட்டுகளை கண்டுபிடித்தாகவும் அனைவரும் சேர்ந்து ஆரியை ஓரங்கட்டுவதாவும் அரி திரும்ப திரும்ப தெரிவிக்கிறார் ஆனால் அது உண்மை அல்ல!” என்று அவரது தரப்பில் வழக்கு முன் வைக்கப்பட்டது.
அப்பொழுது விவாதம் தொடங்கிய நிலையில் ஆரி முன் வாய்த்த கருத்துக்களை ஏற்க மறுத்த சம்யுக்த ஆரி தன்னை இப்பொழுது கூட தறுதலை என்று கூறி என்னை காயப்படுத்திக்கிறார் என்று கூறினார். இதை பொய் என்று கருதிய ரசிகர்கள் குறும்படம் ஒன்று ஏற்பாடு செய்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இக்குறும்படம் உங்கள் பார்வைக்காக!
அது மட்டுமின்றி தறுதலை என்ற வார்த்தை மற்றவர்களை கூறும் பொழுது நகைச்சுவை உங்களை கூறினால் காயப்படுத்துதல் என்று அர்த்தமா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுவரை நன்றாக விளையாடிய சம்யுக்த தற்பொழுது பாதை மாறி போகிறாரா என்ற கேள்வியும் அவரின் ஆ தர்வர்களின் மனதில் எழுகிறது. இதைப் பற்றி உங்கள் கருத்து?
#Aari words are true. No one can ignore. Way to go man…
#AariArjunan#BiggBossTamil #BiggBoss4Tamil#BiggBossTamil4 pic.twitter.com/FXGU3QTufD
— Arun (@ArunM77795775) November 4, 2020