தமிழ் சினிமாவில் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான திரைப்படம் வெளியாகும் நிலையில் ஆயிரக்கணக்கான பாடல்கள் வெளியாகி வருகின்றன. அதில் சில பாடல்கள் மற்றும் பாடகர்கள் மட்டுமே ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடிக்கின்றது. அந்த வகையில் தன் குரல் வளத்தின் மூலம் பல கோடி மக்களின் மனதை வென்ற ஸ்ரேயா கோஷலின் மனதை வென்றவர் புகைப்படத்தை இதுவரை பார்த்ததுண்டா?
வெஸ்ட் பெங்கால் மாநிலத்தை சேர்ந்த ஸ்ரேயா கோஷல் 1998-ம் ஆண்டு இந்தியா சினிமாவில் பாடகராக அறிமுகமானார். ஹிந்தி, தமிழ், கன்னடா, மலையாளம் தெலுங்கு, மராத்தி என 19 மொழிகளுக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ள ஸ்ரேயா கோஷல் 2002-ம் ஆண்டு வசந்த் பாலன் இயக்கத்தில் வெளியான ஆல்பம் திரைப்படத்தில் செல்லமே செல்லம் என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து பிதாமகன், எனக்கு 20 உனக்கு 18, 7 ஜி ரெயின்போ காலனி, விருமாண்டி, வசூல் ராஜா, அந்நியன், அயன் என பல திரைப்படங்களில் 100 ற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்று சாதனை படைத்தார். சினிமாவில் உள்ளபொழுது அவரைப் பற்றி பல கிசு கிசுக்கள் வெளிவந்த நிலையில் அதையெல்லாம் பொய்யாக்கி 2005-ம் ஆண்டு அவரது நீண்ட நாள் நண்பரான ஷிலாடிய என்பவரை திருமணம் செய்துக்கொண்டர்.
வட இந்தியர்கள் என்பதால் தமிழ் மக்களுக்கு அவரது கணவரை பெரிதளவில் தெரியாத நிலையில் சமீபத்தில் ஸ்ரேயா கோஷல் தன் கணவருடன் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகின்றது. அதைக் கண்ட ரசிகர்கள் பலரும் ஸ்ரேயா கோஷலுக்கு திருமணம் ஆயிடுச்சா எனவும் ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.
View this post on Instagram