Actress Sana Khan Marriage

இந்த லாக்டவுனானது தனிமனிதரின் தொழில் மற்றும் வேளைகளில் பல தடைகளை கொடுத்தாலும் திருமணத்தில் எந்த தடையும் தரவில்லை என்றால் கூற வேண்டும் காரணம் இந்த லாக் டவுனில் தான் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லாத பிரபலங்கள் கூட திருமணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் சிலம்பாட்டம் திரைப்பட நடிகை சனா கான் அவர்களுக்கு நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 32 வயதாகும் சனா கான் 2005-ம் ஆண்டு ஹிந்தி சினிமா மூலம் இந்தியா சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் தமிழ் திரைப்படங்களில் மசாலா பாடல்களில் ஆடிவந்த சனா கான் 2008-ம் ஆண்டு சரவணன் இயக்கிய சிலம்பாட்டம் திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தார். அதன் பின் தெலுங்கு மலையாளம் கன்னடா என அணைத்து மொழிகளிலும் நடித்த சனா கான் நடன இயக்குனருடன் காதலில் விழுந்தார்.

Actress Sana Khan

மெர்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வருவதாக அதிகாரபூர்வமாக கடந்த ஆண்டு அறிவித்திருந்த நிலையில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் மெர்வின் லூயிஸ் தன்னை ஏமாற்றிவிட்டதாக போலீஸ் புகார் அளித்து மிகப் பெரிய சர்ச்சையை உண்டாக்கினார். காதல் தோல்வியினால் மிகவும் துவண்டு பூனா சனா கான் கடந்த மாதம் திரையுலகை விட்டு விலகி இஸ்லாமிய மத கோட்பாடுகளை முழுமையாக பின்பற்ற போவதாக தன் சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்பொழுது குஜராத் மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய அறிஞரான முஃப்தி அனஸ் என்பவரை திருமணம் செய்துள்ளார். சூரத்த்தில் நடந்த இந்த திருமணமானது நெருங்கிய நண்பர்களுடன் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மேலும் அதன் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பரப்பப்பட்டு வருகின்றது. மேலும் மாப்பிள்ளையை கண்ட சில ரசிகர்களுக்கு சனா கான் இவரைத் திருமணம் செய்ததில் உடன்பாடு இல்லாதது போல் தெரிகின்றது. அதைத் தவிர்த்து ரசிகர்கள் பலரும் சனா கானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

Actress Sana Khan Marriage Actress Sana Khan Marriage

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here