Sms

சிவ மனசுல சக்தி என்னும் திரை படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை அனுயா பகவத்.இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான படம்.இப்படத்தில் நடித்தவர் தான் நடிகை அனுயா பகவத்.அதில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவர் முதன் முதலில் 2007 ஆம் ஆண்டு மகேக் என்ற ஹிந்தி படம் மூலம் சினிமா துறைக்கு வந்தார்.sms படத்தை தொடர்ந்து மதுரை சம்பவம்,நஞ்சு புறம் மற்றும் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதன் பிறகு பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகி வரும் நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக பங்கு பெற்றார்.இந்நிகழ்ச்சியில் தமிழ் பேசத்தெரியாத ஒரே காரணத்தால் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரமே எவிக்சன் மூலம் வெளியேற்றப்பட்டார்.பின் இவர் திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்ட வில்லை.தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.தனது திரையுலக வாழ்க்கையிலிருந்து 2018 ஆம் ஆண்டு விலகினார்.பின்பு எந்த ஒரு திரையுலகிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை. இந்நிலையில் அனுயா பகவத் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைராலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here