பெரும்பாலான பாலிவுட் நடிகைகளுக்கு எப்போதுமே தென்னிந்திய சினிமா மீது ஒரு கண் இருக்கும்.நடிகைகள் ஆசையுடன் ஒன்று அல்லது இரண்டு தென்னிந்திய படங்களில் நடித்து அதன் பின்னர் மீண்டும் பாலிவுட் சினிமாவிற்கே சென்று விடுகின்றனர்.வெறும் ஓர் இரு படங்கள் நடித்து இருந்தாலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறார்கள்.

அவ்வாறு இருக்க மக்கள் அவர்களுக்கு அமோக வரவேற்பு கொடுத்து இருந்தாலும் திரும்பவும் பாலிவுடிற்கே திரும்பவும் சென்று விடுகிறார்கள்.அப்படி குறிப்பிடுகையில் குறிப்பாக மீரா சோப்ரா,பிரியங்கா சோப்ரா,கங்கனா ரணாவத்,தீபிகா படுகோனே ஆகிய நடிகைகளுக்கு தமிழ் மக்கள்கள் அமோக வரவேற்பு குடுத்துள்ளனர்.இருப்பினும் இவர்கள் யாரும் மறுபடியும் தமிழ் சினிமா பக்கம் எட்டிப்பார்க்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த அனுஷ்கா, சந்தானம்,சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் தான் லிங்கா.இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா.இப்படம் வெளியாகி மெகா ஹிட் ஆகும் என எதிர்பார்த்த நிலையில் படம் சுமாரான வெற்றியை பெற்றது.இருப்பினும் ரசிகர்களை ஈர்க்க தவறவில்லை.

அதே போல் அறிமுக நாயகி சோனாக்ஷி சின்ஹா வை ரசிக்க தனி கூட்டமே தியேட்டருக்கு கிளம்பியது என்றே சொல்லலாம்.நடிகை சோனாக்ஷிகு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.லிங்கா படத்தை தொடர்ந்து இவர் அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் பாலிவுட் சினிமாவிற்கே சென்றுவிட்டார்.இவர் சல்மான் கான், ஷாருக் கான் உள்ளிட்ட பாலிவுட் சினிமா முன்னணி நடிகர்களுடன் நடித்து நடிகையாக வளம் வருகிறார்.




