பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சுன் டிவியில் ஒளிபரப்பு ஆகும் அனைத்து தொடருமே மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று வந்தது.அதிலும் சுன் டிவி என்றாலே அந்த காலம் முதல் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.அந்த வகையில் ஆயிரமாவது எபிசோடை லைவாக ஒளிபரப்பி கின்னஸ் ரெகார்ட் பெற்ற சீரியல் தொடர் தான் நாதஸ்வரம்.
இந்த சீரியலில் கதாநாயகனாக அதே சீரியலின் இயக்குனர் நடித்து வந்தார்.அந்த சீரியலில் நடித்து அனைத்து கதாபாத்திரங்களும் தற்போது வரை மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து இருக்கிறார்கள்.இந்த சீரியல் தொடர்களுக்கு பெயர் போனவர் 5 சகோதரிகள் தான்.
கோபி என்னும் கதாபாத்திரத்திற்கு சகோதரிகளாக நடித்த மகேஸ்வரி (ரேவதி),காமு(பென்சி),பரமு(ஜெயஶ்ரீ),ராகினி(ஸ்ருதி ஷன்முகப்ரியா),கீதா(சங்கவி)ஆகிய 5 பெரும் நடிப்பில் பட்டைய கிளப்பி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறார்கள்.இந்த சீரியல் பல வருடங்களுக்கு பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் சகோதரிகளாக நடித்து பிரபலமான சின்னத்திரை நடிகைகளின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.