சில தினங்களாகவே நடிகை ராஷ்மிக திருமணம் குறித்து செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றனர்.இந்திய மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை ராஷ்மிக.இவரும் விஜய் தேவர்கொண்ட இருவரும் காதலித்து வருவதாக பல தரப்பிலிருந்து கிசு கிசு கள் எழுந்து வருகிறது.கீதா கோவிந்தம் படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்து இருந்தார்கள்.மேலும் டியர் காம்ரேட் இந்த ஹிட் ஜோடி இணைந்து இருந்தது.

சமீபத்தில் இந்த ஜோடி விடுமுறைக்காக மாலத்தீவு சென்ற புகைப்படங்கள் போன்றவை இருவரும் சுப நிகழ்ச்சிகளை ஒரே வீட்டில் கொண்டடியதாக பரவிய புகைப்படங்கள் போன்றவை வெளியாகி இணையத்தில் வைராலகி வருகிறது.இந்நிலையில் இருவரின் வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், பிப்ரவரி 2வது வாரத்தில் நிச்சயதார்தம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி வைரலானது.

இந்த செய்திகள் பரவி வரும் நேரத்தில் தான், ரஷ்மிகா மங்தனா பேசிய பழைய வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.அந்த வீடியோ ஒன்றில் உங்களது காதலர் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்வியை ரஷ்மிகா விடம் கேட்க,அவர் கண்டிப்பாக சிகரெட் பிடிக்கும் பழக்கமோ,மதுவுக்கு அடமையாகவோ இருக்க கூடாது என்ற பளிச் என்று கூறினார்.மேலும் எப்போதும் பார்ட்டியில் சோஷியல் ட்ரிங்கராக இருந்தால் ஓகேதான் என்றும்,உண்மையாகவும்,அன்பாகவும் vibe set ஆகும் வகையில் இருக்க வேண்டும் என்று பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.



