இந்தியா சினிமாவை பொறுத்த வரை நடனம் என்ற பெயர் எடுத்தால் கண்டிப்பாக பிரபு தேவா என்ற பெயர் இடம் பெறும்.அந்த அளவிற்கு நடனத்தையும் பிரபு தேவா என்ற பெயரையும் எடுக்க முடியாது அந்த அளவிற்கு தனது நடனத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இந்தியா சினிமா ரசிகர்களால் பிரித்து பார்க்கவே முடியாது.

நடனத்தை தாண்டி பிரபு தேவா அவர்களுக்கு நடிப்பு மற்றும் இயக்கம் என பல திறமை உண்டு.தற்போது விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் GOAT படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.வெளிவந்த GOAT போஸ்டரில் பிரபு தேவவும் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தனது பொங்கல் வாழ்த்தை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். தற்போது தனது மகன்களுடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும் அதே போல் அதை பார்த்த ரசிகர்கள் கமென்ட் செய்து வருகிறார்கள்.
