ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அதன் வசூலை வைத்து அல்ல ரசிகர்கள் அந்த திரைப்படம் பார்க்கும் பொழுது உண்மையாக நடப்பது போல் பிரமிப்பது தான். உண்மையில் திரைப்படத்தில் நடிகர் அழும் பொழுது பார்வையாளர்களும் அழுவதும் நடிகர் சிரிக்கும் பொழுது பார்வையாளர்களையும் அழ வைப்பதும் தான் படத்தின் உண்மையான வெற்றி! அப்படிப்பட்ட வெற்றியயை படைத்தது சூரரை போற்று திரைப்படம்.
சுதா கங்கோரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. ரசிகர்கள் மட்டுமின்றி விஜய் தேவர்கொண்ட உட்பட பிரபலங்கள் பலரும் சூரரை போற்று திரைப்படத்தை பார்த்து வாழ்த்தி வருகின்றனர். அதிலும் மாறன் காதாபாத்திரம் பலரின் மனதையும் வென்ற ஒன்று.
சூரரை போற்று திரைப்படத்தில் மாறன் என்ற கதாபாத்திரம் தன் தந்தை கடைசி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது ஆந்திராவில் இருந்து மதுரை வர கட்டணம் குறைவாக இருப்பதால் பிளைட் டிக்கெட் கிடைக்காமல் தவிப்பது போல் சித்தரிக்கப் பட்டிருக்கும். அந்தக் காட்சியில் டிக்கெட் கொடுக்கும் பெண்மணியை ரசிகர் ஒருவர் திரைப்படத்தை மனதளவில் உண்மை என்று நினைத்து நீ டிக்கெட் கொடுக்காதனால தான் எங்க அண்ணனுக்கு இப்படி ஆச்சு என்று திட்டி இருப்பார். அதனை தொடர்ந்து பல ரசிகர்களும் திட்டி தீர்த்திருப்பனர்.
அவற்றையெல்லாம் படித்த அலிஷா மெளனி அந்த கமெண்ட்ஸ்களுக்கு புகைப்படம் எடுத்து அதை தன சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து என்னை மன்னித்துடுங்கள் அடுத்த முறை கொடுத்து விடுகிறேன் என்று உண்மையில் நடப்பது போல் பதிலளித்துள்ளார். சூரரை போற்று திரைப்படம் மக்களின் மத்தியில் அழியாத ஒன்றாக மாறி வருவது இது போன்ற கருத்துக்களை கொண்டு நமக்கு தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.
View this post on Instagram
View this post on Instagram