பல ஆண்டுகளாக சினிமாவில் பல பிரச்சனைகளையும் தடங்கல்களையும் சிக்கி வந்த பிரபல நடிகர் சிலம்பரசன் கொரோனா ஊரடங்கில் உடல் இடையை குறைத்து தாமதமாகி வந்த திரைப்படங்களில் விரைவாக நடித்து முடித்து வருகினர். அந்த வரிசையில் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தை முடித்து அதற்கான டீசரும் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகின்றது.

ஈஸ்வரன் திரைப்படம் பேச்சுகள் முடிவதற்குள் தற்பொழுது சிலம்பரசன் மாநாடு திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப் பட வைத்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 2018 ம் தொடங்கிய “மாநாடு” திரைப்பட படப்பிடிப்பு பஸ்ட் லுக் வெளியாகி சில நாட்களிலேயே படபிடிப்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது அதன் பின் 2 ஆண்டுகளாக முடியாத ப்ராஜெக்ட்டில் தற்பொழுது சிம்பு கலந்துகொண்டு அதன் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அன்று முதல் ரசிகர் உட்பட பலரும் மாநாடு அப்டேட் கேட்டுவந்த நிலையில் மாநாடு திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டரில் நவம்பர் 10-ம் தேதி மாநாடு திரைப்படத்தை பற்றின அப்டேட் வெளியிடுவதாக கூறி பட குழுவின் முக்கிய நபர்களை டேக் செய்திருந்தார்.

அதில் நடிகையை பதிவிட தவறிய இயக்குனரை பிரேம் ஜி அமரன் “என்ன தைரியம் இருந்தால் நடிகை கல்யாணி பெயரை குறிப்பிட மறந்திருப்பீர்கள்” என்று கேள்வி எழுப்பி உள்ளார். வெங்கட் பிரபுவின் சகோதரர் பிரேம் ஜி யும் இப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் ப்ரியதர்சனின் மகளான கல்யாணி சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து அமேசான் செயலியில் வெளியான புத்தம் புது காலை என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தற்பொழுது மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் அன்னான் தம்பிக்குள் ஏற்பட்ட செல்ல சண்டையை கவனித்த ரசிகர்கள் அவ பெயர் போடலான இவன் எதுக்கு கோவப் படறான் என்று விமர்சித்து வருகின்றனர்.

Kalyani Priyadharshan Kalyani Priyadharshan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here