70’ஸ் மற்றும் 80’ஸ் திரைப்படங்களில் ரசிகர்களின் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை ஸ்ரீ பிரியா. தமிழ், தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் நடித்துள்ள ஸ்ரீ பிரியா இதுவரை 300 ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அத்தனை புகழை பெற்ற ஸ்ரீ பிரியா தன் அடுத்த தலை முறையை சினிமா-வில் ஈடுபடுத்தவில்லை காரணம் தெரியுமா? அதை பற்றின முழு விவரம் இங்கே!!
அவள் ஒரு தொடர் கதை, ஆட்டுக்கார அலமேலு, அலாவுதீன் அற்புத விளக்கு, பில்லா, யமனுக்கு யமன், அமர காவியம், வாழ்வே மாயம் உள்ளிட்ட எக்கச்சக்கமான வெற்றி திரைப்படங்களை கொடுத்த ஸ்ரீ பிரியா 80’ஸ் களில் பாதியில் இருந்து துணை கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினர்.
இதற்கிடையே ராஜ்குமார் சேதுபதி என்ற மலையாளம் திரைப்பட நடிகரும் ஸ்ரீ ப்ரியாவும் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஸ்ரீ பிரியா நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து பட இயக்குவதில் நாட்டம் கொண்டார் 4-5 படங்கள் இயக்கி வெளிவந்த பின் பெரிய திரையை விட்டு சின்ன திரையில் தோன்ற ஆரம்பித்தார். அதிலும் நீண்ட நாள் நடிக்காது சில வருடங்களில் திரைகளில் தோன்றுவதையே நிறுத்தி விட்டார். ஸ்ரீப்ரியா ராஜ்குமார் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சினிமா குடும்பத்தில் பிறந்த ஸ்ரீ ப்ரியாவின் மூத்த மகள் சினேகா தற்பொழுது லண்டனில் துணை வழக்கறினராக பணியாற்றி வருகிறார். இவரை கவனித்த இயக்குனர்கள் பலரும் படத்திற்கான வாய்ப்புகள் கொடுத்து வரும் நிலையில் அவர் மறுத்து வருகின்றார். இதற்கான காரணம் கேட்கையில் தனக்கு வழக்கறிஞராக இருப்பதில் மிகுந்த ஆர்வம் இருப்பதாகவும் தமிழகத்தில் நான் ஒரு சிறந்த வழக்கறினராக இருப்பது மட்டுமே என் லட்சியம் அதனால் சினிமாவில் தோன்றினால் என் இலட்சியத்தை நோக்கி செல்ல தாமதம் ஆகும் என்று கூறியுள்ளார்.
சினிமாக்களில் தோன்றி படத்திற்கு ௫௦ லட்சம் சம்பாரிக்க நினைக்கும் பலரின் மத்தியில் இவர் நாட்டின் சட்டத்தை காக்க முன்வருவது பாராட்டக்குறியது. மேலும் கமல் ஹாசன் அவர்களிடமே கேள்வி கேட்டும் தைரியத்தை கொண்ட ஸ்ரீ பிரியா அவரது மகளையும் வீரமாகத் தான் வளர்த்தி இருப்பார் அதனால் சட்டங்களிலும் சினேகா கராறாக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.