பிரபல வின்டேஜ் நடிகரான விஜயகுமார் குமார் மகள் வனிதா விஜயகுமார் சில படங்களில் நடித்து பிக் பாஸ் மூலம் தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமானார். கொளுத்தி போடுவதிலும் சண்டை போடுவதிலும் பி எச் டி பட்டம் வாங்கி உள்ளார் என்றால் கூற வேண்டும். பிக் பாஸ்ஸிலும் சரி வெளியே வந்த பிறகும் சேரி நெட்டிசன் தன்னை கலாய்க்கும் வகையில் கன்டென்ட் கொடுக்கும் வனிதா தற்பொழுது இன்னொரு பங்கமான கன்டென்ட் கொடுத்துள்ளார்.
1995-ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த “சந்திரலேகா” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான வனிதா அவர்கள் இதுவரை 6 படங்கள் நடித்துள்ளார். சினிமாக்களில் பெரும் அளவில் வரவேற்பு கிடைக்காத வனிதாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி அதிஷ்டவசமாக அமைந்தது அத்தொடர் மூலம் மீடியாக்களின் கண் வனிதா அவர்களின் பக்கம் திரும்பியது.
இந்நிலையில் தகுந்த துணையின்றி தவித்த வனிதா அவர்கள் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். வனிதா ஏற்கனவே ஆகாஷ் என்பவரையும் ஆனந்த் ஜெயராஜன் என்பவரையும் திருமணம் செய்து விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. பீட்டர் பால்-க்கு வனிதாவிற்கு முன்னரே ஒரு மனைவி இருந்துள்ளார்.
பல பிரச்சனைகளையும் போராட்டங்களையும் தாண்டி திருமணம் செய்து கொண்ட இவர்கள் தற்பொழுது தங்களது மூன்று குழந்தைகளுடன் சந்தோசமாக குடும்பம் நடத்தி வருகின்றனர். ஒருவரை ஒருவரை புரிந்து கொண்ட இத்தம்பதியினர் வனிதாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் கோவா சென்றுள்ளார். அங்கு ஜோடியாக நயன்தாரா விக்னேஷ் சிவன் பாணியில் எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இதைக்கண்டு ரசிகர்கள் பலரும் கலாய்த்து வரும் நிலையில் வனிதா அவர்கள் இன்னும் அதற்கு பதிலடி எதுவும் கொடுக்கவில்லை சீக்கிரமே இன்ஸ்டாகிராமில் அதற்கு ஒரு லைவ் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram