Wild card entry bigg boss tamil 4

நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக் பாஸ் தமிழ் சீசன் 4 தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. மற்ற சீசன் பார்மேட் படி இந்த சீசனிலும் 16 போட்டியாளரை கொண்டு தொடங்கியுள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 4-யிலும் வைல்ட் கார்ட் என்ட்ரி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நாம் கணித்த அணைத்து போட்டியாளர்களும் பிக் பாஸ்ஸில் பங்கேற்றுள்ள நிலையில் தற்பொழுது அந்த 17- வது போட்டியாளரையும் கணித்துளோம். அதன் பற்றின விவரம் கீழ்கண்டவற்றில்

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இன்னும் 1 வாரம் கூட முடியாத நிலையில் வீட்டினுள் பிரச்சனைகள் தொடர்ந்து உருவாகி கொண்டே தான் இருக்கின்றன. போட்டியின் இரண்டாம் நாளிலே சுரேஷ் சக்கரவர்த்திக்கும் அனிதா சம்பத்திற்கும் சில கருத்து வேறுபாடுகள் நடந்ததும் அது தற்பொழுது பகையாக மாறி வருவது நாம் அனைவரும் பார்த்து கொண்டு தான் இருக்கின்றோம்.

Anitha Suresh Controversy

எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றும் படி இந்த வார டாஸ்க்காக “அவர் அவர் வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகள் மற்றும் அவமானங்களை பற்றி பகிர வேண்டும்” என பிக் பாஸ் கூறி இருந்தார். இதில் சம்யுக்த, வேல்முருகன், ரேகா, ரியோ, நிஷா, அனிதா, ஆரி, கேப்ரில்லா ஆகியோர் பகிர்ந்த நிலையில் மற்ற 8 போட்டியாளர்களிடம் “இவர்களில் எந்த 4 போட்டியாளர்களின் கதை மனம் கவர்ந்திருந்தது” என பிக் பாஸ் கேட்டறிந்தார்.

அதில் ஆரி, வேல்முருகன், நிஷா, ரியோ கதைகளை சக போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்த நிலையில் மற்ற 4 போட்டியாளர்களான அனிதா, ரேகா, சம்யுக்த கேப்ரில்லா ஆகியரை எலிமினேஷனிற்கான நாமினிசாக பிக் பாஸ் அறிவித்துள்ளார். சம்யுக்த, கேப்ரில்லா மீது இதுவரை எந்த விதமான சர்ச்சைகளும் வீட்டினுள் வராத நிலையில் ரேகா அல்லது அனிதா பிக் பாஸ் வீட்டினை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது.

First Week Nomination

வழக்கமாக 40-50 நாட்களுக்கு பிறகு வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டினுள் புதிய போட்டியாளரை அறிமுகம் செய்வார்கள் அந்த வகையில் இந்த சீசனுக்கான முதல் வைல்ட் கார்ட் என்ட்ரியை பற்றின செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த சீனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பங்கேற்கவுள்ள அந்த போட்டியாளர் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் அர்ச்சனா தான்.

நல்ல சத்தமான குரல் வளத்தையும் உள்ளதை உள்ள படி பேசும் குணங்களை கொண்ட அர்ச்சனா அவர்கள் இந்த சீசனிற்கான வனிதாவாக விளங்குவர் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தற்பொழுது குரலை உசத்தி பேசும் சுரேஷ் சக்கரவர்த்தி அர்ச்சனா வந்த பின்தான் அடங்குவர் என்று ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த தருணத்திற்காகவும் காத்திருக்கின்றனர்.

VJ Archana

VJ Archana Family

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here