எத்தனை புது முக நடிகைகள் அறிமுகமாகினாலும் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தையும் ரசிகர்களையும் பெற்று இன்று வரை வெற்றித் திரைப்படங்களை கொடுத்து வருபவர் த்ரிஷா. அனைவர்க்கும் அடித்தளம் அருமையாக அமைத்து விட்டால் அதன் பின் மேலே ஏறுவது சுலபமாக அமையும். அப்படி திரிஷாவுக்கு அடித்தளமாக அமைந்த முதல் படத்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அப்படி தெரியாவிட்டால் இந்த பதிவு உங்களுக்காகத் தான்!
அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2002-ம் வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான த்ரிஷா தொடர்ந்து பல வெற்றிப்படங்களை தந்து 18 வருசமாக தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். திரையுலகில் உள்ள பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள த்ரிஷா இதுவரை 50 ற்கும் மேற்பட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
2015-ற்கு பின் த்ரிஷா மார்க்கெட் குறைந்து விட்டது என்று விமர்சனங்கள் வெளிவந்த நிலையில் 2018 ம் ஆண்டு 96 என்ற திரைப்படத்தில் நடித்து ப்ளாக்பஸ்டர் ஹிட் ஒன்றை கொடுத்து மீண்டும் தன் இடத்தை தக்க வைத்து கொண்டார். பலரின் வெற்றிகளை மட்டும் பார்க்கும் நாம், அந்த இடத்திற்கு வரும் முன் அவர்கள் பட்ட கஷ்டங்களை நாம் பெரிதாக கருத்தில் கொள்வதில்லை.
அப்படி த்ரிஷா அவர்களும் தன் முதல் பட வாய்ப்பிற்காக இரண்டு வருடங்கள் காத்திருந்தவர் தான் அவர் மௌனம் பேசியதே திரைப்படத்திற்கு முன்னரே 1999-ம் ஆண்டு ஜோடி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரவீன் காந்தி இயக்கத்தில் பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடித்த திரைப்படத்தில் சிம்பரனுக்கு தோழியாக துணை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார். அவருக்கு அந்த திரைப்படத்தில் நடித்ததற்கு கிடைத்த சம்பளம் வெறும் 500 மட்டும் தானம்.
உழைப்பு ஒருவனை உயர்த்தும் என்றே பழமொழிக்கு ஏற்ப உழைத்த த்ரிஷாவின் தற்பொழுதைய சம்பளம் 1.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.