பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் மக்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் தான் அதிகம் மக்களால் பேசப்படுவர்கள் என்று நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் நினைத்திருந்த நிலையில் அவர்களை எல்லாம் ஓரந்தள்ளிவிட்டு மக்களிடம் அறிமுகமே இல்லாத சுரேஷ் சக்கரவர்த்தி தற்பொழுது பிக் பாஸ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி வருகின்றார். அதிகமாகவும் மக்களால் பேசப்படுகின்ற பிரபலமாக மாறி வருகின்றார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 தொடங்கி இரண்டாவது நாளிலேயே எச்சில் விவகாரம் தொடங்கியது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. செய்தி வாசிப்பாளர் அனிதா அவர்கள் சுரேஷ் சக்கரவர்த்தியை கலாய்க்க முற்பட்ட பொழுது கடுப்பான சுரேஷ் சக்கரவர்த்தி தொகுப்பாளர் ஒருவரை சுட்டி காட்டி அவங்க வணக்கம் சொன்ன எச்சில் தெறிக்கும்! அதனால நாங்க தள்ளியே இருப்போம் என அனிதாவையும் மறைமுகமாக தாக்கும்படி சுரேஷ் கலாய்த்தார்.
அதன் பின் அது அனிதாவுக்கும் சுரேஷுக்கும் பெரிய பகையை உண்டாக்கி இதுவரை இருவரும் சரியாக பேசிக்கொள்வது இல்லை. இந்த விவகாரம் முதலே சுரேஷின் உண்மை முகத்தை அறிய விரும்பும் மீடியாக்கள் அவரை தெரிந்த பிரபலங்கள் பலரையும் பேட்டியெடுத்து வருகின்றனர். ரம்யா கிருஷ்ணன், ஸ்ரீ பிரியா போன்றவர்கள் சுரேஷ் பற்றின நல்ல கருத்துக்களை தெரிவித்திருந்த நிலையில் பிரபல சன் டிவி தொகுப்பாளர் நிர்மலா பெரியசாமியும் சுரேஷின் தோழி என்பது தெரியவந்துள்ளது. நிர்மலா பெரியசாமி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து நிர்மலா பெரியசாமியிடம் மொட்டை தாத்தாவை பற்றி கேட்ட பொழுது “சுரேஷ் எப்பொழுதும் இப்படித்தான்! வெளியேயும் பெண்களுடன் எடக்கு மடக்காக தான் பேசிட்டு இருப்பார். ஆனா, எங்களுக்கு எல்லாம் கொடுக்க வேண்டிய மரியாதையை கரெக்ட்டா கொடுப்பாரு. அவர் கூட நான் பெருசா எந்த நிகழ்ச்சி பண்ணலானாலும் அவர் கூட ஒரு நிகழ்ச்சி மட்டும் தான் சன் டிவில பண்ணி இருக்கான் ஆனாலும் அவர் எனக்கு நெருங்கிய நண்பர். நான் அவரது திருமணத்துக்கு பெங்களூரு சென்று இரண்டு நாட்கள் அங்கேயே தங்கி சிறப்ப பங்கேற்று தான் வந்தேன்.அந்த அளவுக்கு நாங்க நண்பர்கள்” என்று கூறினார்.
மேலும் வணக்கம் சொன்ன எச்சில் தெறிக்கும் என சுரேஷ் உங்களையே சுட்டி காட்டினார் என்று நிர்மலாவிடம் கேட்ட பொழுது “அவர் அப்படியா சொன்னாரு? நான் பிக் பாஸ் பெருசா பாக்க மாட்டேன், அப்போ அப்போ அதில் வரும் ப்ரோமோ மட்டும் தான் பாப்பேன். அதனால எனக்கு பெருசா என்னனு தெரியல. அப்படியே சொல்லி இருந்தாலும் எனக்கு கவலை இல்ல அவன் என்ன கலாய்க்க சொல்லி இருப்பான்”
“அவன் என் கூட நிகழ்ச்சி பண்ணும் பொழுது, அவன் தான் எங்க செட்ல காமெடி பீஸ்! அவன் இருந்தாலே எங்க செட் கலகலப்பா தான் இருக்கும். அவன் சொன்னானா நம்மளும் அவனுக்கு எதிரா விமர்சனம் தெரிவிக்கணும்னு அவசியம் இல்ல! அவன் எனக்கு என்னைக்குமே ஒரு நல்ல சகோதரன் தான்” என்று கூறி முடித்தார். அவரது உண்மை என்னதான் என்று கணிக்க முடியாத நிலையில் இனி வரும் காலங்களில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.