தமிழ் சினிமாவில் பல வருடங்களாக னக்கென்ற மார்க்கெட்டை தக்கவைத்து கொண்டிருக்கும் என்றும் இளைமையான நடிகை த்ரிஷா. பிரபல நடிகை என்றாலே அவரைப் பற்றின கிசு கிசுக்கள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இவரது காதல் வாழ்க்கையை பற்றி வெளிவந்த செய்திகளை கூட நாம் அனைவரும் அறிந்திருப்போம்.
நடிகை திரிஷா தெலுங்கு நடிகர் ராணாவை காதலித்து வருகிறார் இருவரும் தனியார் ஹோட்டலில் ஒன்றாக காணப்பட்டார்கள் என்ற பல செய்திகளும் வெளிவந்த நிலையில் 2015-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த வருண் மணியன் என்ற தொழிலதிபருடன் த்ரிஷாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் அது திருமணத்தில் முடியாமல் பிரிவினில் முடிந்தது.
தொழில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் வரும் மணியன் தான் தற்பொழுது மோசடியில் சிக்கியுள்ளார். அயனம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேஷன் என்பவர் வருண் நிறுவனத்திடம் இரண்டு பிளாட் வாங்குவதற்காக ரூபாய் இரண்டு லட்சம் கொடுத்து முன் பதிவு செய்துள்ளார். ஆனால் முழு பணத்தையும் கொடுத்து வாங்க தாமதித்தலால் வருண் இவரிடம் அறிவிக்காமலேயே வேர் ஒருவருக்கு விற்று உள்ளார்.
இதை அறிந்த வெங்கடேசன் வருணிடம் முன் பதிவு தொகையை திருப்பி கேட்ட பொழுது இருவருக்கும் சல சலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை போலீஸ் வருணிடம் விசாரித்த பொழுது வெங்கடேஷ் தான் முன் பதிவை ரத்து செய்தார் என்று கூறி குற்றத்தை ஏற்க மறுத்துள்ளார்.
அதன் பின் தீவிர விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடித்த போலீஸ் வருண் மீது நம்பிக்கை மோசடி பணமோசடி மிரட்டல் என மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். வருண் மணியன் காவியதலைவன், வாய் மூடி பேசவும் போன்ற படங்கள் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.