பிரபல தமிழ் பட நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தியான ஸ்ருதிகா “ஸ்ரீ” “நல தமயந்தி” “ஆல்பம்” போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் படங்களில் தோன்றுவதை நிறுத்திய ஸ்ருதிகா யூடூப் சேனல் ஒன்றில் தான் பல இயக்குனரின் சினிமா வாழ்க்கையை முடித்ததாக கூறியுள்ளார். மேலும் தான் மொக்கையாக இருப்பதால் சூர்யாவுடன் ரொமான்ஸ் பண்ண முடியவில்லை என்றும் ஓப்பனாக பேட்டியளித்துள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டு புஷ்பவாசகன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக அறிமுகமான ஸ்ருதிகா இதுவரை தமிழ் படங்கள் நாளிலும் மலையாள படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.அதன் பின் சினிமா செட் ஆகாததால் அதனை விட்டு விலகிய ஸ்ருதிகா சமீபத்தில் யூடூப் நேர்காணல் ஒன்றில் தொகுப்பாளர் “ஸ்ரீ” திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என புகழ்ந்த பொழுது அதற்கு ஸ்ருதிகா அவர்களே முன் வந்து “அந்த திரைப்படம் அட்ட பிளாப் எனவும் நான் அதில் மொக்கையாக இருந்ததால் ரொமான்ஸ் பண்ண வரவில்லை எனவும் நடிகர் ரொமான்ஸ் செய்ய மிகவும் முயற்சித்தார் எனவும்” கூறியுள்ளார்.
மேலும் அந்த திரைப்படத்தில் இடம்பெறும் பாடலைப் பற்றி கேட்கையில் அதற்கு ஸ்ருதிகா “அந்த பாடலை இசையமைப்பாளர் வேறு யாருக்காவது போட்டு இருக்கலாம், எனக்கு போட்டு வேஸ்ட் பண்ணிவிட்டார் என்றும் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து “வெயில்” “அங்காடித் தெரு” போன்ற படங்களை எடுத்த வசந்த பாலனின் சினிமா கனவு தன்னால் தான் கலைந்ததாகவும், இது போல் பல இயக்குனர்களின் சினிமா வாழக்கையை தான் முடித்ததாகவும் வேடிக்கையாக கூறியுள்ளார்”.
View this post on Instagram
அந்தக் காணொளி ரசிகர்களின் மத்தியில் வைரலாகி சமூக வலைத் தளங்களில் வைரலாகி பரவி வருகின்றன! அந்தக் காணொளி உங்கள் பார்வைக்காக! 2011-ம் ஆண்டு ஸ்ருதிகா அர்ஜுன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஆரவ் என்ற 8 வயது மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
View this post on Instagram
She killed the show 😂😂😍😍😍 pic.twitter.com/rphb5qN4rm
— மலடா அண்ணாமல (@MeetShivaG) February 8, 2021