asdasdasdas

நடிகர் மயில்சாமி அவர்கள் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும். மற்றும் சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? போன்றவற்றில் நடுவராகவும் பங்களித்துள்ளார். பின்பு அதனை தொடர்ந்து வெற்றிப்படங்கள் ஆன
நான் அவனில்லை.

adsdasd

நான் அவனில்லை 2, தூள் , கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களின் மூலமாக புகழ்பெற்றார். இதைத் தொடர்ந்து பல குரல் மன்னன் என்னும் பெயர் பெற்றவர்.

மயில்சாமி போன்று அவருடைய மகனும் சினிமாவில் அடி எடுத்து வைத்திருக்கும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.நடிகர் மயில்சாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று கோயிலுக்கு போயிட்டு வீட்டிற்கு வந்திருந்த நிலையில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருந்தார். அவருடைய இழப்பிற்கு பிறகு தான் அவர் என்னவெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரிய வந்தது.

ADad

மேடை நிகழ்ச்சிகளிலும், சினிமாக்களிலும் காமெடியாகவே மயில் சாமியை பார்த்த ரசித்த ரசிகர்களுக்கு அவருடைய உண்மையான குணம் வெளியே தெரிய வந்தபோது பலரும் கண்கலங்கி இருந்தனர். இல்லாத மக்களுக்கும் தன்னிடம் உதவி என்று வந்தவர்களுக்கும் தன்னிடம் இருக்கும் மொத்த பொருள்களையும் உதவியாக கொடுத்த மயில்சாமி சில நேரங்களில் தன்னிடம் எதுவும் கொடுக்க இல்லாதபோது தனக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் உதவிகள் வாங்கி செய்திருந்ததை பலரும் மயில்சாமி நினைவு நாளில் பகிர்ந்து இருந்தனர்.

DsdD

அதோடு மயில்சாமி குடும்பத்தினரை பற்றியும் அப்போதுதான் பலருக்கும் தெரிய வந்திருந்தது. மயில்சாமியின் மகன்களில் ஒருவர் இப்போது சின்னத்திரையில் அறிமுகமாகி இருக்கிறார். இது சினிமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. மயில் சாமியால் பலர் உதவிகளை பெற்றிருந்த நிலையில் மயில்சாமியின் குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வந்திருந்தனர்.

asas

இந்த நிலையில் இப்போது மயில்சாமியின் மகனான யுவன் மயில்சாமி விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் தங்கமகள் என்ற சீரியலில் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறாராம். அதற்கான சூட்டிங்கில் யுவன் மயில்சாமி கலந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
வெள்ளி திரையை விடவும் இப்போது சின்ன திரையில் மூலமாக அதிகமான ரசிகர்களை கவர்ந்து விடலாம் என்று பலரும் புரிந்திருக்கின்றனர். அந்த வரிசையில் யுவன் மயில்சாமி ஆரம்பமே சின்ன திரையில் அமர்க்களமாக தொடங்கி இருக்கிறார். அதுவும் விஜய் டிவி என்பதால் இளம் ரசிகர்கள் இவருக்கு இனி அதிகரிக்க போகிறார்கள் என்பது தெரிகிறது. தன்னுடைய அப்பாவின் கனவு லட்சியத்தை யுவன் மயில்சாமி நிறைவேற்ற வேண்டும் என்று அவருக்கு வாழ்த்துக்களை பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

asdasd

நம்முடைய சார்பாக நாமும் யுவன் மயில்சாமி பெரிய அளவில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்தி கொள்ளலாம். அதோடு அவருக்கு ஜோடியாக விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்த நடிகை அஸ்வினி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த சீரியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here