Bharathi raja and Santhosh

ஏற்கனவே இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் இரண்டாம் பாகம் போஸ்டர் வாழை பழத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்பொழுது அதன் டீசர் வெளியாகியுள்ளது. வயதில் மூத்தவர்களுக்கு இந்த மாதிரியான டீசர்கள் பிடிக்கவில்லை என்றாலும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வகையில் வைரலாகி வரும் இந்த டீசர் சில நல்ல விமர்சனங்களும் சில நெகடிவ் விமர்சனங்களும் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் பிரபல இயக்குனர் பாரதி ராஜா அவர்களும் இந்த டீசரை கண்டு ‘தமிழ் கலாச்சாரத்தை அழிக்கும் வகையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது, சினிமா என்பது குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் பார்ப்பது அதனால் இந்த திரைப்படம் வெளியிடக்கூடாதென வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.

“இப்படிப் பட்ட படங்களை பார்க்கும் பொழுது என் கண்கள் கூசிகின்றது” என தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்த இந்த செய்தியை ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் கண்டு ஆதரித்து வருகின்றனர். இந்த பதிவினை பார்த்த இரண்டாம் குத்து நடிகர் மற்றும் இயக்குனருமான சந்தோஷ் ஜெயக்குமார் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதற்கு பாரதி ராஜா இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் 1981-ம் வெளிவந்த டிக் டிக் டிக் திரைப்படத்தில் இடம்பெறும் கிளமர் புகைப்படத்தை சுட்டி காட்டி இதை பார்க்கும் பொழுது கண்கள் கூசவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு வாயடைத்து போன பாரதிராஜாவிடம் எந்த விதமான பதிலும் இல்லை.

அன்று முதல் இன்று வரை கிளமர் காட்டியே பழகிய தமிழ் சினிமாவில் இது போன்ற படங்கள் வழக்கமாக வந்து கொண்டு தான் உள்ளது ஆனால் இதில் அனைத்தையும் வெளிப்படையாக கூறி மற்றும் காமித்துள்ளது தான் தவறு. என்னதான் சந்தோஷ் அவர்கள் ஹர ஹர மஹாதேவகி இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும் அனுபவம் வாய்ந்த இயக்குனரை இப்படி கேள்வி எழுப்பி உள்ளது தவறு.

Santhosh Tweet

அதுமட்டுமின்றி மண் வாசம் மிகுந்த பாரதி ராஜா அவர்களின் சினிமா அனுபவம் தான் சந்தோஷ் அவர்களின் வயது என்பதையும் அவர் புரிந்து பாரதி ராஜாவிடம் மன்னிப்பு கேட்கவேண்டுமென ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு பாலா இயக்கத்தில் ரிமேட் செய்யப்பட்ட திரைப்படத்திலும் கலாச்சாரத்தை சிதைக்கும் படி காட்சிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமாக்களில் ஒரு வரம்பு வரை தான் அணைத்து விதமான கட்சிகளும் அனுமதிக்க வேண்டும் என பிரபலங்கள் பலரும் நடிகர் சங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Irandam Kuthu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here