ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு தமிழ் ரசிகர்களால் மிகவும் பேசப்பட்ட நடிகை ரேகா ௫௦ ற்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது 16 வயதிலேயே திரைப்படங்களில் தோன்ற ஆரம்பித்த ரேகா தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதற்கிடையே இவர் கமல் ஹாசனை பற்றி வெளியிட்டுள்ள செய்தி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

1970-ம் ஆண்டு கேரளாவில் பிறந்த ரேகா பாரதி ராஜா இயக்கத்தில் சத்யராஜுடன் கடலோர கவிதைகள் என்றே திரைப்படத்தில் முதன் முதலாக தோன்றினார். அடுத்தடுத்து மலையாளம் தெலுங்கு கன்னடா என்று அடுத்தடுத்து தோன்றிய ரேகா இந்தியா சினிமா துறையில் நல்ல வரவேற்பை பெற்றார் இதன் மூலம் பிரபலங்களுடன் நடிக்க ரேகாவிற்கு வாய்ப்பு கிடைத்ததது.

Actress Rekha

அதன்படி கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1986-ம் ஆண்டு வெளிவந்த “புன்னகை மன்னன்” திரைப்படத்தில் கமலுடன் ஜோடி சேர்ந்திருப்பர். காதல் தோல்வியால் மனமுடைந்த கமல் ஹாசன் தனக்கென பிறந்த மற்றொரு பெண்ணை சந்தித்து காதலிப்பது போல் அமைந்திருக்கும் இத்திரைப்படத்தில் கமல் ஹாசனின் முன்னாள் காதலியாக ரேகா நடித்திருப்பார்.

இப்படி அமைந்த இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் கமல் ரேகாவிற்கு முத்தம் கொடுத்த பின்னர் மலையில் இருந்து குதிப்பதுபோல் எடுக்கப்பட்டது. அப்படி அந்த காட்சியில் குதிக்கும் பொழுது கமல் உயிர் தப்பி விடுவது குறிப்பிடத்தக்கது. இக்காட்சியானது ரசிகர்களிடையே பெரும் சென்டிமென்டலாக அமைந்தது.

நல்ல வரவேற்பை பெற்ற இந்த காட்சியில் உள்ள பின்னணி சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரேகா. இதை பற்றி அவர் கூறுகையில் “10-வது படிக்கும் எனக்கு அப்பொழுது முத்த காட்சிகளில் நடிப்பதில் துளி கூட ஆர்வம் இல்லை. ஆனால், புன்னகை மன்னன் திரைப்படத்தில் கமல் ஹாசன் என் அனுமதியின்றி வலுக்கட்டாயகமாக எனக்கு முத்தம் கொடுத்தார்”

Rekha and Kamal in punnagai mannan

 

“கே.பாலச்சந்தர் கட்டளைப்படி நான் கண்களை மூடினேன் கமலும் இயக்குனரும் ஏற்கனவே பேசி வைத்து, கமல் ஹாசன் எனக்கு முத்தம் கொடுத்துவிட்டார். நான் பலதடவை என் தந்தை இது போன்ற காட்சிகளுக்கு உடன்பட மாட்டார் என்று கூறியும் அவர்கள் இதை எனக்கு செய்து விட்டனர். கமல் மற்றும் பாலச்சந்தர் என்னை திட்டினாலும் பரவாயில்லை நான் என் வருத்தத்தை தான் கூறினேன்” என்று கூறினார்.

தற்பொழுது பெண்கள் அனுமதியின்றி தொடவே கூடாது என்று விழிப்புணர்வு திரைப்படங்கள் வரும் நிலையில் அப்பொழுது அனுமதியின்றி ஒரு பெண்ணிற்கு முத்தம் கொடுத்துள்ளதை என்னவென்று கூறுவதென்ன தெரியவில்லை. இதைக் கண்ட ரசிகர்கள் பலரும் கொந்தளித்து வருகின்றனர். ரேகா மற்றும் கமல் இருவரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 யில் பங்கேற்றுள்ள நிலையில் இதைப்பற்றி விவாதிக்க வேண்டும் என்பது பலரின் கருத்து.

Rekha and Kamal in punnagai mannan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here