இந்திய சினிமாவில் மிகவும் பிரம்மாண்டம் நிறைந்த அதே சமயம் மிகவும் வெற்றிகரமான திரைப்படம் பாகுபலி. இரண்டு பாகங்களை கொண்ட இத்திரைப்படத்தின் முதல் பாகம் 2015-ம் ஆண்டும் இரண்டாம் பாகம் 2017-ம் ஆண்டும் வெளியாகியது. முதல் பாகத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற ட்விஸ்ட்டுடன் முடித்த பட குழுவினர் இரண்டாம் பாகத்தில் தான் காரணத்தை கூறினார்.
பிரபாஸ் ராணா டகுபாட்டி தமன்னா அனுஷ்கா ரம்யா கிருஷ்ணா நாசர் போன்ற பல பிரபலங்கள் இத்திரைப்படத்தில் நடித்திருந்தாலும் சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் பலரின் மனதையும் வென்ற ஒன்று. பாகுபலி சிம்மாசனத்துக்கு அடிமையாக கட்டப்பா இருந்தாலும் அவரது விசுவாசமானது பலருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் சத்யா ராஜ் அவர்களும் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார்.
நடிகர் சத்யராஜ்-ற்கு திருப்புமுனையாக அமைந்த இத்திரைப்படத்தில் முதலில் அவரை கட்டப்பா கதாபாத்திரத்துக்கு யோசிக்கவே இல்லை என்று இயக்குனரின் தந்தை விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார். இதைப் பற்றி அவர் கூறுகையில் “நாங்கள் பாலிவுட் நடிகரான சஞ்சய் டூட் என்பவரை தான் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடிக்க முடிவெடுத்திருந்தோம் ஆனால் எதிர்ப்பாராத விதமாக படப்பிடிப்பின் பொழுது அவர் சிறையில் இருந்தார் அதனால் சத்யாராஜ் அவர்களை தேர்ந்தெடுத்தோம்” என்று கூறினார். ராஜமௌலி தன் தந்தையின் கதையை தான் படமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பம்பாய்யை சேர்ந்த சஞ்சய் டூட் சில தீவர வாத செயல்களால் 1995-ம் ஆண்டு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பின் ஓரிரு ஆண்டு சிறையில் இருந்த சஞ்சய் 2016-ம் ஆண்டு முழுவதுமாக குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவர் பாகுபலி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டாலும் இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் கே ஜி எப் சேப்டர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.