விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 4 மற்ற சீன்களை விட இந்த சீசனில் பெரிதும் எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்டது. சீசன் தொடங்கி 13 நாட்களே ஆன நிலையில் வனிதா, மீரா மிதுன் போன்ற பிரபலங்கள் பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்பொழுது கஸ்தூரியும் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் கார சாரமாக நடந்து முடிந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 3 யில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பங்கேற்ற கஸ்தூரி 1 வாரங்கள் மட்டுமே தாக்கு பிடித்த நிலையில் மற்ற போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு எலிமினேட் ஆனார். அதன் பின் சம்பள பாக்கிய உள்ளிட்ட விஜய் தொலைக்காட்சியின் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள கஸ்தூரி தற்பொழுது பிக் பாஸ் தமிழ் சீசன் 4 பற்றி அக்கு அக்காக பிரித்து வைத்துள்ளார்.

Kasthuri

90-ஸ் களில் கதாநாயகியாக கொடி கட்டி பறந்த கஸ்தூரி மார்க்கெட் குறைந்த பின் மசாலாவில் இறங்கினர். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடா என பல தென் இந்திய மொழிகளில் நடித்துள்ள கஸ்தூரி இப்பொழுது திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அதிகம் தோற்றமளிக்கும் கஸ்தூரி நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்களுக்கு முன்பு புது போட்டியாளராக நுணைந்துள்ள தொகுப்பாளினி அர்ச்சனா எதற்காக பிக் பாஸ் வீட்டினுள் நுணைந்துள்ளார். பிக் பாஸ் ஏற்கனவே பேசப்பட்டு நடுத்துவதா என்ற பல கேள்விகளுக்கும் கஸ்தூரி பதிலளித்துள்ளார். இதை பற்றி அவர் கூறுகையில் “கடந்த சீசனுடன் ஒப்பிடுகையில் இந்த சீசனில் சண்டையை கிளப்ப யாரும் இல்லை அதனால் தான் விஜய் தொலைக்காட்சி அர்ச்சனாவை அனுப்பியுள்ளது அதுமட்டுமின்றி நல்ல சண்டை போடும் ஆட்கள் கிடைக்கும் வரை விஜய் தொலைக்காட்சி போட்டியாளர்களின் தேடலை நிறுத்தாது” எனவும் கூறியுள்ளார்.

மேலும் அர்ச்சனா மிகவும் தன்மையான நபர் என்றாலும் அவர் மற்றவர்களை அதிகாரம் செய்யவேண்டும் என்ற தன்மையை உடையவர் அதனால் மற்ற போட்டியாளர்கள் தங்களது உண்மை முகத்தினை வெளிப்படுத்துவர் என்றும் கஸ்தூரி கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பிக் பாஸ் என்பது எதுவும் முன்னே பேசி வைத்து விளையாடுவது அல்ல முற்றிலும் போட்டியாளர்களே விளையாடுவது என்றும் கூறியுள்ளார். அவர் பேசிய முழு காணொளி கீக்கண்டவற்றில்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here