Priya Varrier latest photoshoot

ஒரு இரவில் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். ஜிமிக்கி கமல் பாடல் நடனத்தை தொடர்ந்து வைரலான ஒரு ஆதார் லவ் என்ற மலையாள டீசரில் நடித்தவர் பிரகாஷ் வாரியர். தனது அழகிய கண்களால் இளைஞர்கள் அனைவரின் இதயங்களையும் சுட்டு தள்ளிய பிரியா தற்பொழுது வெளியிட்ட கிளமர் புகைப்படங்களும் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகைகள் பலரும் இந்த கொரோனா காலத்தில் பல போட்டோஷூட்கள் செய்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்த நிலையில் பிரகாஷ் வாரியரும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினர். இப்புகைப்படங்களில் கிளமர் கொஞ்சம் கூடுதலாக இருந்ததால் சினிமா பிரபலங்கள் உட்பட பல நெட்டிசன்கள் இவர் பட வாய்ப்பிற்காக தான் இப்படி எல்லாம் செய்கிறார் என கலாய்த்து வந்தனர்.

Oru-Adaar-Love

அத்துடன் சில கடுப்பேத்தும் விமர்சனங்களை கண்ட பிரியா வாரியர் அதற்கு பதிலளித்து விமர்சர்களை வாயடைத்து போக வைத்துள்ளார். இதைப்பற்றி அவர் கூறுகையில் “வணக்கம் நண்பர்களே! நான் வெளியிட்டிருந்த புகைப்படங்களுக்கு நீங்கள் பதிவிட்டிருந்த விமர்சனங்களை நான் படித்தேன். அதில் சிலர் என்னை மிகவும் கேவலமாக விமர்சித்திருந்தீர்கள் அதற்கு நன்றி!”

“நான் இது போன்ற விமர்சனங்களை தினமும் படித்து தான் வருகின்றேன் எனக்கு புதிதல்ல. இதுபோன்றவற்றுகளுக்கு நான் கவலை படப்போவதும் இல்லை. நான் விமர்சிற்கும் அளவிற்கு வளர்ந்துளேன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார். அப்படி பெரிதும் விமர்சனத்துக்குள்ளான புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!!

Priya Varrier Priya Varrier

சிலர் அப்புகைப்படங்களை விமர்சித்து வந்தாலும் அவரது ரசிகர்கள் பலரும் அப்புகைப்படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு தந்துள்ளனர். சினிமாவை பொறுத்தவரை பிரியா தற்பொழுது ஹிந்தி தெலுங்கு கன்னடா என பல இந்திய மொழிகளில் கால்தடம் பதித்து நடித்துவருகிறார். இவர் இதுவரை தமிழில் ஒரு திரைப்படம் கூட நடிக்காதது குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here