Bigg Boss Tamil season 4 contestant age

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ம் தேதி தொடங்கியுள்ள நிலையில் 16 போட்டியாளர்கள் அத்துடன் 1 வைல்ட் கார்டு என ஆகமொத்தம் 17 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்த சீசன் தொடங்கி 10 நாட்களுக்கும் மேல் ஆனா நிலையில் ரசிகர்கள் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யாரெல்லாம் முகமூடி அணித்திருக்கின்றனர் யாரெல்லாம் உண்மை முகத்தை காட்டுகின்றனர் என ஒரு அளவிற்கு வகுத்திருப்பர்.

8 ஆண் போட்டியாளர்கள் 8 பெண் போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த சீசனில் சுரேஷ் சக்கரவர்த்தி அனிதா ரியோ ராஜ் போன்றவர்கள் முன்னெடுத்து வைத்து வீட்டினுள் நடக்கும் பிரச்சனைகளில் ஈடுபட்டாலும் ஒரு சில போட்டியாளர்கள் அமைதியாக இருந்து தங்கள் காரியங்களை முடித்து வருகின்றனர். அந்த வகையில் ஷிவானி சம்யுக்த சோம் போன்றவரால் இன்னும் சரியாக எதிலும் ஈடுபட வில்லை.

Bigg Boss Contestants

கடந்த திங்கட்கிழமை சக போட்டியாளர்கள் நாமினேஷன் செய்து எலிமினேஷன் பிராசஸ்சில் கேப்ரிலே ரேகா சம்யுக்த சனம் ஆஜீத் ரம்யா பாண்டியன் ஷிவானி உள்ளிட்டோர் அடங்கியுள்ளனர். சோமசேகர் பாலா போன்ற போட்டியாளர்கள் வயதில் மிகவும் மூத்தவர்கள் என்று நினைத்திருந்த நிலையில் அவர்களது வயது ரசிகர்களின் மத்தியில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது வயது பட்டியல் உங்கள் பார்வைக்காக!!

பாலாஜி-25 வயது

வளர்ந்து வரும் மாடல் மற்றும் பாடி பில்டரான பாலாஜிக்கு 25 வயது தான் ஆகிறது. ஆனால் இவருக்கு 30 வயதினருக்கு மேல் உள்ள பக்குவங்கள் இப்பொழுதே இருக்கின்றது. சிறப்பாக விளையாடியும் வருகின்றார்.

சோமசேகர்-26 வயது

வீட்டினுள் மிகவும் அமைதியான போட்டியாளர் சோமசேகர். இவர் வெளித்தோற்றம் மூலம் 35 வயதுக்கு மேல் இருப்பார் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் இவருக்கு 26 வயது தான் ஆகிறது. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிவானி-19 வயது

சீரியல் நடிகை மற்றும் ரசிகர்களின் செல்வாக்கு பெற்ற ஷிவானிக்கு ௧௯ வயதே ஆகிறது. இவர்தான் வீட்டிலேயே மிகவும் இளையவர்.

சம்யுக்த-36 வயது

முன்னணி மாடலான சம்யுக்தவிற்கு ௩௬ வயதாகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை அதுமட்டுமின்றி இவருக்கு திருமணமாகி ௪ வயதில் ஒரு குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற போட்டியாளர்கள்: ரியோ ராஜ்-31, நிஷா-38, ஆரி-34, கேப்ரிலே-19, சுரேஷ் சக்கரவர்த்தி-46, அனிதா சம்பத்-28, ஆஜீத்-22, ரம்யா பாண்டியன்-30, ரேகா-50, ஜித்தன் ரமேஷ்-37, அர்ச்சனா-38, வேல் முருகன்-40, சனம்-31.

Bigg Boss Tamil

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here