Archana is big headache for balaji

பிரபல ஜீ தமிழ் தொகுப்பாளினி அர்ச்சனா அவர்கள் ஒரு வாரம் தாமதத்திற்கு பின்னர் 17 போட்டியாளராக பிக் பாஸ் தமிழ் சீசன் 4 யில் பங்கேற்றுள்ளார். முதல் நாளே பத்த வைக்க நினைத்த பிக் பாஸ் குழு அர்ச்சனாவிடம் சில பட்டங்களை கொடுத்து அதற்கு ஏத்த படியான ஆட்களை தேர்வு செய்ய கூறி இருந்தார். அதற்கு “நோ கமெண்ட்ஸ், சிம்பிலி வேஸ்ட்!” என்ற பட்டத்தை பாலாவிற்கு கொடுத்தார்.

தனது விளையாட்டை நன்றாக விளையாண்டாலும் அதிகம் முன் கோபம் கொண்ட பாலா சனம் ஷெட்டி பணியாற்றிய நிறுவனத்தை டுபாக்கூர் என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் கமல் பாலாவை ஒரு டோஸ் வாங்கிய முதல் அவர் சனமிடம் சரியாக முகம் கொடுத்து பேசுவதில்லை அதே போல் அர்ச்சனா வீட்டினுள் நுழைந்துடன் அதிக ஈடுபாடு காட்டாது அவரை ஒரு பாரமாக நினைத்து அர்ச்சனா ஒரு பெரிய தலைவலி என்று கூறியுள்ளார். அது நமக்கு படம் போட்டு காட்டவில்லை.

Archana in Bigg Boss

தற்பொழுது திரையில் வெளியிடாத 12-ம் நாள் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அதில் ரியோ, அனிதா சம்பத், நிஷா, சோமசேகர், அர்ச்சனா உள்ளிட்டோர் கூட்டணியாக இணைந்து பேசிக்கொண்டிருந்த நிலையில் அதில் பங்கேற்றிருந்த பாலாஜி அவர்கள் திடீர் என்று அந்த இடத்தில இருந்து வெளியேறினார். இதனால் அவரை பற்றி பேச ஆரம்பித்த நிலையில் அர்ச்சனாவை பற்றி பாலா கூறியதை நினைத்து அர்ச்சனா வருத்தப்பட்டர்.

அர்ச்சனா கூறியது என்னவென்றால் “பாலாஜி என்னை இன்னும் இந்த வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை, மற்றவர்கள் அனைவரும் நான் வந்த நாள் அன்று வரவேற்ற நிலையில் அவர் என்னை கண்டுக்கவே இல்லை! அதுமட்டுமின்றி என்னை ஒரு தலைவலி என்று கூறியதை கேட்டேன், இப்பொழுது போக போக கொஞ்சம் என்னுடன் இணைத்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.

என்னதான் தற்பொழுது இவர்களுக்கு ஒரு பந்தம் ஏற்பட்டாலும் முதலில் ஆரம்பித்த மனஸ்தாபம் கண்டிப்பாக இருவர் மனதினுள்ளும் இருக்கும் அதனால் கண்டிப்பாக இருவருக்கும் மிக பெரிய சண்டை வெடிக்கும் என்று பலராலும் எதிர் பார்க்கப் படுகிறது. மேலும் இந்த சண்டை வெடித்தல் ரசிகர்களுக்கு மிக பெரிய பொழுதுபோக்காக அமையும் என்பதில் ஆச்சரியமில்லை. அவர்கள் கலந்துரையாடிய வீடியோ இதோ!

 

View this post on Instagram

 

A post shared by biggBoss unseen official (@biggboss_unseenvidzz) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here