தமிழ் திரைப்பட நடிகர் காமெடியன் மற்றும் அரசியவாதியான குமரிமுத்து தனது சிரிப்புக்கு பிரபலமானவர். 30 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்த குமாரிமுத்து நான்கு வருடங்களுக்கு முன் வயது முதிர்ச்சியால் காலமானார். அவரை அடக்கம் செய்யப்பட்டு சமாதி அமைத்திருக்கும் இடத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

1940-ம் ஆண்டு கன்னியாகுமரியில் கிறிஸ்துவ குடும்பத்தினருக்கு பிறந்த குமரிமுத்து அவர்கள் சென்னைக்கு வயிற்றுப் பொழப்புக்காக குடி பெயர்ந்து 1979 ம் ஆண்டு இயக்குனர் மஹேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த உதிரிப்பூக்கள்  திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் நடிப்பை தொடர்ந்து குமரிமுத்து இதுவரை தமிழில் 50-ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Comedy Actor Kumari Muthu

இது நம்ம ஆளு, சகாதேவன் மஹாதேவன், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, மருமகன் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள குமரிமுத்து அவர்கள் தனது சிரிப்பை சாதகமாக பயன் படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். நல்ல வரவேற்பிற்கு பின் அரசியலில் குதித்த குமரிமுத்து திராவிட கட்சி ஒன்றில் சேர்ந்து சேவை செய்து வந்த நிலையில் 2016-ம் ஆண்டு காலமானார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் பிரபு தேவா இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில் 2009 ம் ஆண்டு வெளிவந்த வில்லு திரைப்படம் தான்.

தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார் குமரிமுத்துவின் மரணம் குறித்து ஒரு குறுகிய வட்டாரத்தினருக்கு மட்டுமே தெரிந்தது. அதன் பின் சமீபத்தில் அவரது மகள் எலிசபத் வெளியிட்ட காணொளி மூலம் தான் ரசிகர்கள் பலருக்கும் அவர் காலமானது தெரியவந்தது. மேலும் அவர் காலமான கல்லறையில் எழுதப்பட்டிருக்கும் வாசகமும் தற்பொழுது வைரலாகிறது.

சென்னை மந்தைவெளியில் உள்ள இடுகாட்டில் அமைந்திருக்கும் இவரது கல்லறையில் “ its Time for The God, To Enjoy His Laughter” என்ற வாசகம் செதுக்கப்பட்டுள்ளது. அப்படி என்றல் “அவரது சிரிப்பை கடவுள் அனுபவிப்பதற்கான நேரம் இது!”என்பது தான். இந்த வாசகத்தை படித்த பலரும் சமூக வலைத்தளங்களில் இந்த யோசனையை பாராட்டி வருகின்றனர்.

Kumari Muthu Graveyard

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here