ராட்சசன் திரைப்படம் மூலம் வெற்றியைக் கண்ட குழந்தைக் கதாபாத்திர நடிகை அம்மு அபிராமி தற்பொழுது குழந்தை கதாபாத்திரங்களையெல்லாம் கடந்த நடிகையாக டேபுட் செய்துள்ளார். ஏற்கனவே ராட்சசன் தெலுங்கு ரீமேக்கில் அபிராமி நடித்திருந்தாலும் நடிகையாக நடித்த முதல் தெலுங்கு திரைப்படம் “Fcuk” என்ற பெயரில் அமைந்துள்ளார்.
தீரன் அதிகாரம் ஒன்று, பைரவா, அசுரன் போன்ற நல்ல கதைகளில் நடித்துவந்த அம்மு அபிராமி தற்பொழுது அடுல்ட் காமெடி திரைப்படமான “Fcuk” என்ற படத்தில் நடித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதில் இடம்பெற்றுள்ள “ஹே ஹூடிய” என்ற பாடலில் க்ளாமர் காட்டியுள்ளது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகின்றது.
இதைக்கண்ட திரைப்பட ரசிகர்கள் 20 வயது தான் ஆகிறது நல்ல புகழும் அடைந்து விட்டார் பின்னர் எதற்காக இவ்வளவுகிளாமர் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். மேலும் இது போன்ற திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்களில் இனி தோன்ற வேண்டாம் என்ற கோரிக்கையையும் ரசிகர்கள் சமூக வலைத் தளங்கள் மூலம் அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.
சினிமாவை பொறுத்தவரை அபிராமி தற்பொழுது மணி ரத்னம் தயாரிப்பில் அரவிந்த் சாமி கவுதம் வாசுதேவ் மேனன் கார்த்திக் நரேன் கார்த்திக் சுப்புராஜ் பொன்ராம் போன்றவர்களின் இயக்கத்தில் ரேவதி சூர்யா சித்தார்த் பிரகாஷ் ராஜ் போன்ற பிரபலங்கள் நடிக்கும் நவரச என்ற வெப் சீரிஸ் நடித்து வருகிறார். அதைத் தவிர்த்து அருண் விஜயின் 33 ம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அபிராமி கமிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. “ஹே ஹூடிய” என்ற பாடல் உங்கள் பார்வைக்காக!