சினிமா துறையை பொறுத்த வரை எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்து இருக்கின்றனர்.தற்போதும் ஒரு சில குள்ள நடிகர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.

அந்த வகையில் ரஜினி நடித்த அருணாச்சலம் படத்தில் நடித்த இவரை 90ஸ் ரசிகர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான அருணாச்சலம் படத்தில் ரம்பா,மeனோரமா,செந்தில்,ரகுவரன் உள்ளிட்ட பல ரசிகர்கள் நடித்து இருந்தார்கள்.

தேவா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.இந்த படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது.இதில் இடம் பெற்ற டயலொக் ஆன ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான் மூலம் இளைஞர்களை கட்டி போட்டர்.

இப்படம் திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடி மாபெரும் சாதனை படைத்து இருந்தது.32.71 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.இவரது பெயர் சுப்ரமணி செல்லமாக சுப்புமணி என்று தான் அழைப்பார்கள்.

ஆனால் அருணாச்சலம் படத்திற்கு பிறகு எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை.இப்படி ஒரு நிலையில் பல ஆண்டுகள் கழித்து பேட்டி ஒன்று அளித்துள்ளார்.அதில் பேசிய அவர் எனக்கு 72 வயதாகிறது.பல ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன்.

4 ஆம் வகுப்பு படிக்கும் போதே வீர பாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் நடித்தேன்.என்னை சினிமாவில் அறிமுகம் செய்தது கே பாலச்சந்தர் சார் தான்.

சினிமாவில் சம்பாதித்த காசு ஒன்னு கூட ஒட்டல.மேலும் அருணாச்சலம் படத்திற்கு பிறகு சினிமாவில் படம் அமையவில்லை. “அதனால நான் வருதப்படவும் இல்லை” என்று பேசி இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here