தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் தலைவனாக தென்படும் தல அஜித் அவர்கள் தன்னை திரையில் அறிமுகப்படுத்திய எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்த வராததது ரசிகர்கள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணங்களையும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதைப் பற்றி விரிவான அலசல் கீழ் பத்தியில்
ஆந்திரவில் பிறந்து தமிழகம் மூலம் பிரபலமான திரு எஸ் பி பி அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு செப்டம்பர் 25- ம் தேதி மதியம் 1-04 க்கு நம்ம விட்டு பிரிந்தார். இதற்கு அவருடன் பழகியவர்கள் பலகாதவர்கள் என பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அனைவரும் எஸ் பி பி மறைவை தாங்க முடியாமல் மௌனம் காத்து வரும் நிலையில் சிலர் மட்டும் ஏன் தல அஜித் அவர்கள் இறுதி சடங்குக்கு வரவில்லை என்று குத்தம் கண்டுபிடித்துள்ளனர்.
அதே ஆந்திராவில் பிறந்து பிழைப்புக்காக தமிழகம் வந்த அஜித் அவர்கள் எஸ் பி பி மகனான எஸ் பி சரணது நெருங்கிய நண்பர். சாதாரண பைக் மெக்கானிக்காக இருந்து தமிழக்கத்தில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக இருக்கும் அஜித் அவர்கள் ஒரு கால கட்டத்தில் நம்மை போல் வாழ்க்கையில் பல தடைகளையும் சந்தித்தவர் தான். தன் சூழ்நிலை காரணமாக சில காலங்களில் மாடலிங் செய்வதற்கு எஸ் பி சரணின் ஆடைகளை கடன்வாங்கி சென்றதும் உண்டாம்.
அப்படி நெருங்கிய நண்பரான எஸ் பி சரண் வீட்டிற்கும் அடிக்கடி அஜித் அவர்கள் போவதும் உண்டு அதன் மூலம் எஸ் பி பி க்கு அறிமுகமான அஜித் அவரது திறமையை கண்டு ‘எஸ் பி பி அவர்கள் தான் 1993-யில் வெளியான “பிரேம புஸ்தகம்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் வாய்ப்பு வாங்கி கொடுத்ததாக ஒரு பேட்டியில் எஸ் பி பி தெரிவித்திருந்தார்.
தன் நெருங்கிய நண்பனின் தந்தை அதுமட்டுமின்றி தன் ஆசான் மறைவிற்கு இதுவரை அஜித் அவர்களிடம் இருந்து எந்த ஒரு தகவல்களும் வராதது வருத்தம் அளித்தாலும், அவர் அவரது சூழ்நிலைகள் அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் கூட அவர் நேரில் வர முடியாமல் போய் இருக்கலாம் என்பது எங்களது கருத்து.
சமூக வலைத்தளங்களும் பயன்படுத்தாத அஜித் தன் இரங்கலை அதிலும் தெரிவிக்க வாய்ப்பில்லை. கொரோனா ஊரடங்கால் மீடியாவை சந்திக்கவும் வாய்ப்பில்லை. இருப்பினும் எஸ் பி சரணுடன் போனில் கூட பேசி இருக்கலாம் அதனால் விஷயம் தெரியாமல் அஜித் அவர்களை குறை சொல்ல வேண்டாமென்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் கொரோனா தொற்று ஏற்கனவே அதிகமாகி வரும் நிலையில் அவர் அதில் பங்கேற்றால் ரசிகர்களின் கூட்டம் கூட வாய்ப்புள்ளதால் தான் வராததுக்கு காரணமாக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் அவர்கள் எஸ் பி பி அவர்களின் இறுதி அஞ்சலியில் பங்கேற்றது பாராட்டக்குறியாது.
Interesting information.
T** pasanga en Ajith varalanu sollave illa potta pasangala