தீபாவளிக்கான ஷாப்பிங் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை பட்டாசு கடை விற்பனையாளர் ஒருவர் சாயீஷா புகைப்படத்தை பயன்படுத்தியதற்காக கடுப்பான ஆர்யா கோவத்தில் அவர் செய்த செயலால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் செய்த செயலுக்கு ரசிகர்கள் உட்பட பலரும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
பல 90-ஸ் பெண்களுக்கும் சாக்லேட் பாய்யாக இருந்த 2005-ம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் என்ற பட மூலம் அறிமுகமாகி மிகப் பெரிய வெற்றியை அடைந்தார். தொடர்ந்து ஒரு கல்லூரியின் கதை ஓரம் போ நான் கடவுள் சர்வம் மதராசபட்டினம் போன்ற வெற்றிப்படங்கள் கொடுத்து வந்தாலும் நடுவில் கொஞ்சம் மார்க்கெட் சரிய ஆரம்பித்த பொழுது அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் கம் பேக் தந்தார்.
40 வயதிலும் பல சினிமா வாய்ப்புகளை பெற்று வரும் ஆர்யா 2018-ம் ஆண்டு கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த சாயீஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்யாவை விட ௧௬ வயது குறைவான சாயிஷாவும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைக்குட்டி சிங்கம் காப்பான் ஆகி திரைப்படங்கள் இவரத்தில் நடிப்பில் சிறந்தவை.
மக்கள் தங்கள் தொழிலுக்கு ஏற்ப அவர்களுக்கு பிடித்த நடிகர் மற்றும் நடிகை புகைப்படம் பயன்படுத்துவது வழக்கம் அப்படி பட்டாசு கடையில் சாதாரண மனிதர் சாயீஷா புகைப்படத்தை பேனர்ரில் பயன்படுத்தி உள்ளார். இதை கண்ட ஆர்யா அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதால் அதை அகற்ற கூறி சத்தம் போட்டுள்ளார். இவர் நேரடியாக சென்று கேட்டால் பிரச்சனை பெரிதாகும் என அருகில் தான் ஒர்க் அவுட் செய்யும் ஜிம் உரிமையாளரிடம் கூறிவிட்டிருக்கிறார்.அதற்கு மன்னிப்பு கூறிய கடை உரிமையாளர் சயீஷா புகைப்படம் தெரியாத படி பேனரை மடக்கினர்.
இந்த குணத்தை ஒருபக்கம் பாராட்டினாலும் மறுபக்கம் சாமான்ய மக்கள் பிரபலன்கள் புகைப்படங்கள் பயன்படுத்துவது சதரணமாகி விட்டது காசு கொடுத்து புகைப்படம் வாங்கும் அளவிற்கு நாங்கள் பணக்காரர்கள் இல்லை அதனால் ஆர்யா இதை செய்திருக்க கூடாது என சில ரசிகர்கள் வருத்தத்தையும் தெரிவிக்கின்றனர். இதைப் பற்றி உங்கள் கருத்து?