Bigg boss confirmed contestants

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்காக அமையும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது வருகின்ற அக்டோபர் மாதம் 4-காம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது. பிக் பாஸ் தமிழ் சீசன் 4 பேச்சை ஆரம்பித்த நாள் முதலே அதில் பங்குபெறும் போட்டியாளர்களை பற்றின பேச்சுகள் அடிப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது அதில் பங்குபெற போகும் உறுதியான போட்டியாளர்கள் பட்டியல் வெளிவந்துள்ளது.

பூனம் பஜ்வா, அதுல்யா ரவி, ராதா ரவி, விமல், ஷிவாங்கி, சரண்யா மோகன், சுனைனா, அமிர்த ஐயர், லட்சுமி மேனன், குக் வித் கோமாளி போட்டியாளர்கள் பலரும் பங்குபெறப்போவதாக கணித்து நம்மை ஏமாளியாக்கி விட்டனர் என்ற கூற வேண்டும். ஏற்கனவே லட்சுமி மேனன் மற்றும் அமிர்த ஐயர் அவர்களுக்கு தாங்கள் பிக் பாஸ்ஸில் பங்குபெறப்போவதில்லை என்று அதிகாரபூர்வமாக தெரிவித்த நிலையில் பலரும் மௌனம் காத்து வருகின்றனர்.

Kamal Haasan Bigg Boss season 4

நீங்கள் இந்த பிரபலங்களை போட்டியாளர்களாக நினைத்து காத்திருந்த வேளையில் நாங்களும் அதைத்தான் நினைத்து காத்திருந்தோம். ஆனால் நமக்கு வந்த ட்விஸ்ட் என்னவென்றால் ஏற்கனவே வெளியிட்ட பட்டியலில் ஓர் இருவரை தவிர வேற யாரும் இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 4 யில் பங்குபெறப்போவதில்லை. பிக் பாஸ் ஆரம்பிக்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமை படுத்தியுள்ளனர்.

இதை வேவு பார்த்த கருப்பு ஆடு ஒன்று பிக் பாஸ் தமிழ் சீசன் 4 யில் பங்குபெற போகும் 16 போட்டியாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஒருவர் அல்லது இவர்கள் கொரோனா தொற்று மற்றும் சில காரணங்களால் மாற வாய்ப்புள்ளது அதை தவிர்த்து 99 சதவீதம் இவர்களே இந்த சீசனில் போட்டியாளர்கள். ரசிகர்களே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்!!

  • ரம்யா பாண்டியன் (நடிகை மற்றும் தொலைக்காட்சி பிரபலம்)
  • பாலாஜி முருகதாஸ் (மாடல்)
  • அர்ச்சனா (விஜே)
  • அறந்தாங்கி நிஷா (காமெடியன் மற்றும் தொகுப்பாளர்)
  • ஷிவானி நாராயணன் (சீரியல் நடிகை)
  • ரியோ ராஜ் (நடிகர் மற்றும் தொகுப்பாளர்)
  • சூப்பர் சிங்கர் ஆஜீத் (பாடகர்)
  • சனம் ஷெட்டி (நடிகை)
  • ஆரி (நடிகர்)
  • கேப்ரில்லா (நடிகை)
  • வேல் முருகன் (பாடகர்)
  • ஜித்தன் ரமேஷ் (நடிகர்)
  • சுரேஷ் (நடிகர்)
  • ரேகா (நடிகை)
  • சோமசேகர் (நடிகர்)
  • அனிதா சம்பத் (தொகுப்பாளர்)

இதில் சிலர் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வரவும் வாய்ப்புண்டு.

Kamal Haasan Bigg Boss season 4

அப்படி ஒரு பிரபலங்கள் நிறைந்த பட்டியலை பார்த்த நமக்கு இப்படி ஒரு பட்டியல் ஏமாற்றம் அளிக்கின்றது ஆனால் பொழுது போக்குக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதி. இந்த சீசனில் ஆண்களை விட பெண்கள் அதிகம் இருப்பதால் ஒரு என்டேர்டைன்மெண்ட் கண்டிப்பாக இருக்கின்றது. காத்திருப்போம் இன்னும் 4 நாட்கள், அகத்தின் வழியில் பார்க்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here