தனது உடல் அமைப்பாலும் வசனங்களை உணர்ச்சி பூர்வமாக சொல்வதின் மூலமாகவும் பிரபலமான சுமன் ஷெட்டி ஜெயம், 7 ஜி ரெயின்போ காலனி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனுக்கு தோழனாக நடித்துள்ளார். தற்பொழுது சினிமாக்களில் பெரிதளவில் தோன்றாத சுமனின் குடும்ப புகைப்படங்கள் தற்பொழுது இணைய தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஆந்திராவில் பணக்கார குடும்பத்தில் பிறந்த சுமன் தனது தந்தையின் உழைப்பை எதிர்பார்க்காமல் சினிமா மீது கொண்ட ஆசையால் ரவி மற்றும் சதா அறிமுகமான ஜெயம் திரைப்படத்தில் இவரும் தமிழில் காமெடியனாக அறிமுகமானார். இத்திரைப்படம் ஏற்கனவே தெலுங்குவில் எடுக்கப்பட்டு வெற்றியடைந்த நிலையில் இதனை ரீமேக் செய்த ராஜா தமிழிலும் அத்திரைப்படத்தை வெற்றித்திரைப்படமாக மாற்றினார். இயக்குனர் ராஜா மற்றும் நடிகர் ரவி இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Suman Shetty

தெலுங்குவில் இருக்கு ரீமேக் செய்யும் பொழுது நடிகர் நடிகை இசையமைப்பாளர்கள் என அனைவரும் மாற்றப்பட்டாலும் சுமன் தன் அசராத நடிப்பால் தமிழிலும் அந்த காமெடி கதாபாத்திரத்தை தக்க வைத்துக் கொண்டார். அதன் பின் குத்து, 7 ஜி ரெயின்போ காலனி, சண்டக்கோழி, படிக்காதவன் போன்ற பல வெற்றி தமிழ் படங்களில் துணை கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.

தன் தாய்மொழி தெலுங்குவில் அதிகப்படியான திரைப்படங்கள் நடித்துள்ள சுமன் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை இவர் 2009-ம் ஆண்டு ஆந்திராவை சேர்ந்த நாக பவானி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவரது கல்யாண புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது. பார்க்க லட்சணமாக இருக்கும் மணப்பெண்ணை மேக் அப் போட்டால் நடிகைகளை விட அழகாக இருப்பார் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இவர்களது குழந்தைகளை பற்றி எந்தவிதமான செய்தியும் இதுவரை வெளிவரவில்லை.

Suman Shetty Marriage Suman Shetty Marriage Suman Shetty Marriage

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here