Theeratha Vilayattu pillai actress

பழங்கால கலாச்சாரத்தில் இருந்து ஒரு புதுவகையான வெளிநாட்டு கலாச்சாரம் தமிழ்நாட்டில் உருவாகும் பொழுது எடுக்கப்பட்ட திரைப்படம் தீராத விளையாட்டு பிள்ளை கல்லூரி பருவத்தில் பல பெண்களை காதலித்து ஏமாற்றும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படமானது பலரின் வரவேற்பையும் பெற்றது.

திரு இயக்கத்தில் விஷால் கிருஷ்ணா நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் நீத்து சந்திரா, சாரா-ஜேன் டயஸ், டானு ஸ்ரீ டுட்டா ஆகிய மூன்று நடிகைகளை கொண்டது. நீத்து சந்திரா மற்றும் டானு ஸ்ரீ டுட்டா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதை வென்றவர் சாரா-ஜேன் டயஸ் தான். காரணம், அத்திரைப்படத்தில் அவர் தான் மிகவும் ஹோம்லியாக நடித்திருப்பார். ஆனால் நான் படத்தில் தான் அப்படி வெளியில் வேற மாறி என்றபடி புகைப்படங்களை தற்பொழுது சாரா-ஜேன் டயஸ் வெளியிட்டு வருகிறார்.

Sarah Jane Dias

ஓமான் நாட்டில் 1982-ம் ஆண்டு பிறந்த சாரா-ஜேன் டயஸ் சேனல் V என்ற ஹிந்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கினர். அதன்பின் மாடலிங்கில் ஈடுபட்ட சாரா-ஜேன் டயஸ் 2007-ம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியில் முதல் இடத்தையும் பிடித்தார். இவர் 2006-ம் ஆண்டு ஆஸ்திரேலியா ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

32 வயதாகும் சாரா ஜேன் தன் 22 வயதில் விஷாலுக்கு ஜோடியாக தீராத விளையாட்டு திரைப்படம் மூலம் இந்தியா சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் தெலுங்குவிலும் “பஞ்சா” என்ற திரைப்படத்தில் டேபுட் செய்தார். இந்த இரண்டு படங்களில் கிடைத்த வெற்றியை வைத்து பாலிவுட் பக்கம் போன சாரா ஜேன் அதன் பின் தென் இந்திய பக்கம் வருவதே இல்லை. 2017-ற்கு பின்  ஹிந்தியிலும் மார்க்கெட் இழந்த சாரா தற்பொழுது சின்னத்திரையில் தோன்றி வருகிறார்.

ஓமான் நாட்டில் பிறந்திருந்தாலும் இந்தியாவில் செட்டல்லான தீராத விளையாட்டு பிள்ளை நடிகை இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. சிங்கிளாக வாழ்ந்து வரும் சாரா ஜேன் சிங்கிள்ஸ்களை குஷி படுத்தும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!

Sarah Jane Dias Sarah Jane Dias Sarah Jane Dias Sarah Jane Dias

 

View this post on Instagram

 

💋 . #beachbum #beachbod #bikini #bodypositive #tanskin #sunshine #sun #love #beach #goa

A post shared by Sarah Jane Dias (@sarahjanedias) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here