Vivek Mass look

முந்தைய கால தமிழ் சினிமாவில் கலைஞர்கள் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிட்டால் அந்த கதாபாத்திரம் தான் கடைசிவரை நம் மனதில் பதிந்திருக்கும் அவர்கள் வேறு கதாபாத்திரத்தில் நடித்தால் மனம் ஏற்று கொள்வது கடினம். ஆனால் தற்பொழுது சினிமா துறை வளர்ந்து வர வர அந்த நிலையும் மாறி வருகின்றது. பல தடைகள் மற்றும் விமரசனங்களுக்கு பின் காமெடி நடிகர் கூட கதாநாயகன் ஆகலாம் என்ற ட்ரெண்ட் தொடங்கியுள்ளது.

உதாரணத்திற்கு காமெடி நடிகர் சந்தானம் அவர்கள் தன் ஆரம்ப காலங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தாலும் அவருக்கான ரசிகர்கள் கிடைத்தவுடன் கதாநாயகனாக மாறினார். முதல் இரண்டு படங்களில் அவர் காமெடி அடையாளம் அழியவில்லை என்றாலும் அதன் பின் அவரை கதாநாயகனாக பார்த்து மக்களின் மனதில் பதிந்தது. அவர் இப்பொழுது கதாநாயகனாக பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

Actor Vivek

அப்படி அந்த காலத்திலும் சரி இந்த காலத்திலும் சரி காமெடியுடன் அரசியலில் உள்ள ஓட்டைகளை சுட்டி காட்டி நடித்து வரும் விவேக் சமீபத்தில் வெளியிடும் மிரட்டலான புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகின்றது. 1987-ம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான விவேக் அவர்கள் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடா உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் நடித்துள்ளார்.

தூள், விஐபி, பிகில், பாய்ஸ், யூத், பேரழகன் என 150-ற்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களில் நடித்துள்ள விவேக் அவர்கள் பல முன்னணி பிரபலன்களுடனும் நடித்துள்ளார். அவருக்கு காமெடி மட்டும் தான் செட் ஆகும் மத்ததெல்லாம் செட்டாகாது என்ற புரளிகளுக்கு புள்ளி வைக்கும் படி தற்பொழுது விவேக் வில்லன் கெட்டப்ப்பில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களின் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்று வருகின்றது. அப்புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!

Actor Vivek Actor Vivek Actor Vivek Actor Vivek Actor Vivek

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here