இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக போற்றப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக மாறும் பேச்சு வார்த்தைகள் தற்பொழுது ஆரம்பித்துள்ளன. பொதுவாக தங்கள் வாழ்வில் சாதித்தவர்கள் என்றாலே அவர்களுக்கு பின் வரும் சங்கதியினருக்கு முன் உதாரணமாக இருக்க அவர்களை பற்றி வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுப்பது வழக்கம். அந்த வகையில் சினிமா துறையில் ஜாம்பவானாக இருக்கும் ரஜினிகாந்தின் வாழக்கையை திரைப்படமாக எடுக்க தமிழ் பட இயக்குனர் லிங்குசாமி ஆசைப்படுகிறார்.
கும்பகோணத்தை சேர்ந்த இயக்குனர் லிங்குசாமி 2001-ம் ஆண்டு மாமூட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா, டெல்லி கணேஷ் போன்ற பல பிரபலங்களை வைத்து ஆனந்தம் என்ற திரைப்படம் இயக்கி முதல் படத்திலேயே வெற்றி கண்டார். அதன் பின் ரன், ஜி, சண்டக்கோழி, பீமா, பையா போன்ற பல வெற்றி படங்களை எடுத்துள்ள லிங்குசாமி சமீபத்தில் விஷால் மற்றும் கீர்த்தி சுரேஷை வைத்து எடுத்த சண்டக்கோழி-2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி தரவில்லை.
இருப்பினும் அதிக அளவில் வெற்றிப்படங்கள் தரும் இவருக்கு ரசிகர்கள் கூட்டமும் இருக்கின்றனர். அப்படி அவரை பற்றி மேலும் அறிந்து கொள்ள சமீபத்தில் எடுத்த பேட்டி ஒன்றில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மிகப் பெரிய ரசிகர் எனவும் அதனால் அவரது வாழக்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க ஆசைப்படுவதாவும் கூறினார்.
அதுமட்டுமின்றி அந்த கதையில் நடிகர் தனுஷ் நடித்தால் சிறப்பாக இருக்கும் எனவும் கூறினார். தன் மாமனார் வாழ்க்கை வரலாற்றில் மருமகனை தவிர வெறும் யாரும் நன்றாக புரிந்து கொண்டு நடிக்க முடியாது என்பது உறுதி. தனுஷ் அவர்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால் அவரும் இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவிக்க மாட்டார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதற்கான திட்டங்கள் மற்றும் படப்பிடிப்புகள் சீக்கிரமாகவே ஆரம்பிக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.