Tharshan and Sanam Controversy

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கருதப்படுபவர் இலங்கையை சேர்ந்த சனம் ஷெட்டி. மாடல் மற்றும் நடிகையான சனம் ஷெட்டி அவர்கள் இதுவரை 10-ற்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகைகள் என்றாலே அவர்களை சுற்றி சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இருக்காது. அந்த வகையில் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள சனம் சமீபத்தில் பிக் பாஸ் புகழ் தர்சன் அவர்களுடன் காதல் சர்ச்சையில் சிக்கினர்.

உண்மையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 3-க்கு முன்னர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தர்சன் , மற்றும் சனம் அவர்களை பற்றி பெரிய அளவில் விவரம் தெரியாது. பிக் பாஸ் தமிழ் சீசன் ௩ மூலம் பிரபலமான தர்ஷன் அவர்கள் சிலர் பிக் பாஸ் வீட்டில் தன் மீது காதல் வயப்பட்ட வாய்ப்பு இருந்ததால் அவரை வெளியில் ஒருவரை காதலிப்பதை சக போட்டியாளர்களிடம் கூறினார் அதனால் தர்சன் காதலியான சனம் அவர்களுக்கும் வெளியில் பிரபலம் ஏற்பட்டது. இவர்களுக்கு முன்னரே நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tharshan Sanam Engagement

அதன் பின் கடைசி வாரத்தில் எதிர்ப்பாராத விதமாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட தர்சன் சீசன் முடிந்து சில வாரங்களிலேயே தான் சனத்துடன் காதல் உறவை முடித்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். அந்த செய்தி மக்களின் மத்தியில் மிகவும் வைரலான நிலையில் சனம் அவர்கள் அதை ஏற்க மறுத்து தனுக்கு மற்றும் தர்சனுக்கு இடையில் நடந்த நிச்சயதார்த்தம் ஆதாரங்களை வெளியிட்டு காவல் துறையில் புகார் அளித்தார்.

காவல் துறையினர் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்காததால் உயர் நீதி மன்றத்தில் சனம் அவர்கள் வழக்கை தொடர்ந்த நிலையில் அவருக்கு பிக் பாஸ் சீசன் 4 யில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து பிக் பாஸ் வீட்டினுள் தஞ்சம் அடைந்துள்ளார். நேற்று இந்த வழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம் இருதரப்பினர் வாதங்களையும் கேட்டறிந்து மேலும் விசாரணையின் நிலையை குறித்து விளக்கம் கேட்டுள்ளது.

இந்த வழக்கு சனம் அவர்களுக்கு சாதகமாக முடிய வாய்ப்பு அதிகம் என கோர்ட் சுற்று புறத்தினர் தெரிவித்து வருகின்றனர். மேலும் தர்சன் தன் சொந்த நாடான இலங்கையில் உள்ளதால் தாமதம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர். எது எப்படியோ பிக் பாஸ் வீட்டின் உள்ளேயும் சரி வெளியவும் சரி சனம் அவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்குது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Sanam in Bigg Boss

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here