இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியா அணி முன்னாள் கேப்டன் டோனி தலைமையில் ‘டெல்வி அணிக்கு எதிராக விளையாடி 44 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை அடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதில் பேட்டிங் மற்றும் பௌலிங் ஆகிய இரண்டிலும் சோதப்பிய சென்னை அணியை பார்த்து இந்த வருடம் செமி-பைனல் வரையாவது போகுமா என்றே சந்தேகம் பலரின் மனதிலும் எழுந்துள்ளது.
ஆட்டம் ஆரம்பம் முதலே ஜெயிப்பதற்கான நோக்கமே இல்லாமல் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிரௌண்டில் காலடி வைப்பதற்கு முன் இரண்டு துயர சம்பவங்கள் அணியினரை தாக்கியது தற்பொழுது வெளியாகி வருகின்றன.
அணியில் நடந்த முதல் துயரம் என்னவென்றால் பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பி அவர்களின் மறைவு. பாடகருக்கும் விளையாட்டு வீரர்கர்களுக்கும் என்ன சம்பந்தமென்று கேட்டால் அதற்கு சம்பந்தம் இருக்கு என்றால் கூற வேண்டும். விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம் கொண்ட எஸ் பி பி அவர்கள் ஒரு கிரிக்கெட் பிரியர் அவர் அடிக்கடி விளையாட்டு வீரர்களை சந்திப்பதும் அவர்களுடன் கலந்துரையாடுவதும் வழக்கமாக கொண்டவர். இவருக்கு இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் நண்பர்கள் என்பது குறிப்பிடதக்கது. அதுமட்டுமின்றி அன்று நடந்த போட்டியில் சென்னை அணியினர் கையில் கருப்பு ரிப்பன்களை கட்டி அவருக்கு மரியாதை செலுத்தினர்.
அணியில் நடந்த அடுத்த சம்பவம் சென்னை அணியின் தொடக்க ஆட்டகாரர் ஷேன் வாட்சன் அவர்களின் பாட்டி மறைவு. ஆட்டத்தில் இறங்குவதற்கு முன்பே இவருக்கு செய்தி வந்திருந்தாலும் அதையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு ஆட்டத்தில் இறங்கி விளையாடியது அவருக்கு அணியின் மேல் உள்ள பாசத்தை குறிப்பிடுகிறது. போன வருடமும் இதே போல் பைனல்ஸில் முட்டியில் காயம் பட்ட பின்னரும் ரத்தம் கசிய கசிய விளையாடினர் என்பது நாம் மறக்க முடியாத ஒன்று.
ஜெயிப்பது தோற்பதெல்லாம் அடுத்த படியான விஷயம் ஆனால் இத்தனை துயரத்திலும் சென்னை அணி விளையாடியதற்கு ஒரு ரசிகனாக சலூட்!