ஷாருக்கானின் மகள் தனது தோல் நிறத்திற்காக அவமானப்படுவதாகக் கூறி ஒரு பதிவைப் பதிவேற்றிய நிலையில் ஒரு நாள் கழித்து இலியானாவும் அதை பற்றின பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான “நண்பன்” திரைப்படம் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமான இலியானா ஆரம்ப கால கட்டத்தில் வெளிதோற்றத்தினால் தான் சந்தித்த அவமானங்களையும் பிரச்சனைகளையும் பதிவேற்றியுள்ளார். மேலும், எப்படி அதனை முறியடித்தார் எனவும் மற்றவர்களில் கேலிகளை பற்றி கவலைப்படுவதை நிறுத்தினார் எனவும் கூறியுள்ளார்.
இந்திய திரைப்பட நடிகையான இலியானா தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் அதிகம் தோன்றுபவர். இவர் 2016-ம் ஆண்டு வெளியான “கேடி” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் டெபுட் செய்தார். அதை தவிர்த்து ஹிந்தியில் இருந்து தமிழில் ரீமேக் ஆனா “நண்பன்” திரைப்படத்தில் 6 வருடங்கள் கழித்து 2012-ம் ஆண்டு நடித்தார். இவர் இதுவரை இரண்டு படங்கள் தான் தமிழில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா அளவில் அதிக ரசிகர்களை கொண்ட இலியானா சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துபவர். அதில் வெளித்தோற்றத்தினால் மனம் உடைந்த ரசிகர்களை உற்சாக படுத்தும் வகையில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை பற்றி கூறுகையில் “நான் எப்படி இருக்கிறேன் என்று எப்போதும் கவலைப்படுகிறேன். என் இடுப்பு மிகவும் அகலமானது, என் தொடைகள் மிகவும் தொளதொளப்பானது, என் இடுப்பு போதுமான அளவில் இல்லை, என் வயிறு போதுமான அளவில் இல்லை, என் மார்பகம் பெரிதாக இல்லை, என் பின் பக்கம் மிகவும் பெரியது, என் கைகள் மிகவும் தள்ளாடியது, மூக்கு நேராக இல்லை, உதடுகள் பெரிதாக இல்லை ஆகமொத்தம் என்னிடம் எதுவும் போதுமான அளவில் இல்லை. நான் போதுமான உயரம் இல்லை, அழகாக இல்லை, வேடிக்கையாக இல்லை, புத்திசாலி இல்லை என்றும் நான் கவலைப்படுகிறேன்.”
ஒவ்வொரு வடு, ஒவ்வொரு காயங்களும், ஒவ்வொரு “குறைபாடும்” என்னை அழகாக மாற்றியுள்ளது என்பது எனக்கு சில நாட்களுக்கு பின்பே புரிந்தது. எனக்கென்ற சொந்த அழகை கொடுக்கின்றது என்பதை உணர்ந்தேன்!” அதனால்தான் மற்றவர்கள் பார்வைக்காக நான் அழகாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை நிறுத்திவிட்டேன். அவர்கள் பார்வைக்கு பொருந்துவதற்கு நான் மிகவும் கடினமாக முயற்சிப்பதை நிறுத்திவிட்டேன். நான் ஏன் அதை செய்ய வேண்டும்? நான் தனித்து நிற்க பிறந்தபோது.” என்று ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
இப்படி தொடர்ந்து நடிகைகள் இது போன்ற தாழ்த்தப்படுவதற்கு குரல் எழுப்பி வருவது ரசிகர்களுக்கு பாலிவுட் திரையுலகத்தின் மேல் கேட்ட எண்ணத்தை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட்டில் அதிக நெபொடிசம் இருப்பதால் தான் இதுபோன்ற விசயங்கள் அரங்கேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பதிவானது வெளித்தோற்றத்தில் குறைகளை கொண்டவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியாக அமைந்துள்ளது.