பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியானது சீசனுக்கு சீசன் சுவாரசியத்தை அதிமாக்கி கொண்டே வருகின்றது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் இதுவரை 18 போட்டியிட்டு 3 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகியுள்ளார். 15 போட்டியாளர்கள் கொண்டு நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் சனம் மற்றும் பாலாஜி விவகாரம் தான் எப்பொழுதும் கார சாரமாக இருக்கும்.
சீசன் ௪ தொடங்கி முதல் வாரத்திலேயே பாலாஜி மற்றும் சனத்துக்கும் இடையே முட்டிக்கொண்டு நிலையில் இருவரும் 3 ம் 4 ம் வாரங்களில் நல்ல நட்பு உருவாக்கி கொண்டு வருவது போல் தெரிந்தது. ஆனால் பாலாஜி கூறிய சில மனதை துன்புறுத்தும் வார்த்தைகளால் பாதிக்க பட்ட சனம் மிகப் பெரிய சண்டையை உருவாக்கினார். இது வெளியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வளர்ந்து வந்த இச்சண்டையை தொகுப்பாளர் கமல் ஹாசன் அவர்கள் தீர்த்து வைக்க முற்பட்டாலும் அப்பொழுது அமைதியாக இருக்கும் இந்த தரப்பினர் மறுபடியும் வார நாட்களில் முட்டி கொள்கின்றனர். இப்படி எலியும் பூனையுமாக சண்டை போட்டுக்கொள்ளும் சனம் மற்றும் பாலாஜிக்கு பிக் பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பே அறிமுகம் இருக்கு என்றால் பலரும் நம்ப மாட்டார்கள் காரணம் அவர் சனத்திடம் பயன்படுத்திய வார்த்தைகள் தான்.
4-ம் வாரத்தில் குறை தீர்க்கும் நீதி மன்றம் என்ற டாஸ்க் வைத்த பொழுது பிக் பாஸ் வீட்டினில் சக போட்டியாளர்களிடம் ஏதாவது தங்களுக்கு குறை இருந்தால் அதை எழுப்பி அவர்கள் மீது வழக்கு தொடரலாம் என கூறப் பட்டிருந்தது. அதில் பாலாஜி வீட்டினுள் நடக்கும் விசியத்தை பேசாமல் சனம் அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் அழகி போட்டியில் வென்றார் என குற்றச்சாட்டு வைத்தார். அது பின்னர் விஜய் தொலைக்காட்சியில் இருந்து நீக்கப்பட்டது.
இப்படி ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி சண்டை போட்டு வந்தாலும் இருவர்களும் வெளியில் அறிமுகமானவர்கள் என்பதால் ஒரு வேலை சண்டை போட்டு இருவரும் பிரபலம் ஆகும் வகையில் தந்திரம் செய்கிறார்களா என்ற சந்தேகம் ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது. அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் உங்கள் பார்வைக்காக!